நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளமையினால் குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டமிடல்களை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நடவடிக்க எடுத்துள்ளார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
அதன் கீழ் எட்டு விசேட் திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க 2000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தம் சீனாவுடன் கைசாத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.