2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, Sri lanka கிரிக்கெட் அந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா நிகர உபரியாக பதிவு செய்துள்ளது.
அந்த வருடத்தில் கிரிக்கெட்டின் மொத்த வருமானம் 17.5 பில்லியன் ரூபாவாகும் எனவும், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 120 வீத வளர்ச்சி எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கணக்கு அறிக்கை கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் பதிவு செய்த 6.3 பில்லியன் ரூபா உபரியானது வரலாற்றில் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், அனுசரணை ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் வருடாந்த ஒதுக்கீடுகள் இந்த வருமான வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.