நாட்டில் அபிவிருத்தியை விடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அபிவிருத்தியைவிடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே கொட்டகலை சுகாதார பிரிவில் சத்துணவு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” – என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவரும், இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் […]

உழவு இயந்திர பெட்டி கழன்று விபத்து – நால்வர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திர கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து ஏற்றிச் சென்றவர்களே உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று அதன் பெட்டி தலைகீழாக வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதில் பயணித்த நால்வரும் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட […]

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து சௌமிய பவாணில் நேற்று கலந்துரையாடல்!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும்,மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிக்ள் தெரிவித்தனர். மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக பல கோணங்களில் ஆராயப்பட்டது. இறுதி தீர்மானம் இம்மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் குழு, […]

கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்

” கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதற்கான ஓர் பாலமாக அரசியலையும் பயன்படுத்துவேன். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் எனது பிரதிநிதிகளை நிறுத்துவேன்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், விஷ்ணு ஆரோஹனம் அமைப்பின் தலைவருமான ச. திருமுருகன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (06.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” 2017ஆம் ஆண்டில் விஷ்ணு ஆரோஹனம் எனும் அமைப்பை […]