புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துகள் அடங்கிய பொதி

இலங்கையை சுற்றிவருவதற்காக நடைபயணம் ஒன்றை ஆரம்பித்த மாத்தறை – தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன மட்டக்களப்பை சென்றடைந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கிலேயே இந்த நடைபயணத்தை கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பை சென்றடைந்த சுகத் பத்திரன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இலங்கையின் வரைபடத்தின்படி கரையோரமாக இலங்கையை சுற்றிவருவதுடன், அந்த நடைபயணத்தில் கிடைக்கும் நன்கொடைகளை கஷ்டப்படும் ஆயிரம் […]

இலங்கையின் சுதந்திர தினம் – கரிநாள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார், எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல. அது கரிநாள் என […]

மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

பொரளை பொலிஸ் நிலையத்தில் தனியார் வைத்தியசாலையொன்றே, வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாக முறைப்பாடு செய்திருந்தனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் 2 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நஷ்ட ஈடு வழங்கவும் தயார்: Maithree

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தெடர்பில் சகல கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகலியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். குறித்த பயங்கரவாத தாக்குதல் தனது ஆட்சியில் நடைபெற்றதால் அதறகு நஷ்ட ஈடு வழங்கவும் தயார் என அவர் கூறியுள்ளார்.

MY3

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகலியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் எனவும் மைத்திரி தெரிவித்துள்ளார். எவ்வாறான அழுத்தங்களுக்கும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.