டிஜிட்டல் தாராசு

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் அதிகாரிகளால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கைப்பற்றப்பட்ட பச்சை தேயிலை கொழுந்து அளவீடு் செய்யப்படும் டிஜிட்டல் தாராசு, மூன்று ஆண்டுகளாக முத்திரை பதிக்கப்படாமல் காணப்பட்டுள்ளது. இதனால் பொகவந்தலாவ தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக சட்ட […]

தந்தை பொல்லால் தாக்கி கொலை

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில் மூன்று அண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைதும்  செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, அயல் வீட்டார் […]

ரேக்ளா வண்டி

செட்டிமேடு பகுதியை சேர்ந்த கோபால்-கண்ணகி தம்பதியின் மகன் விஜய் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-மேரி தம்பதியின் மகள் ரம்யாவுக்கும் இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் அவர்களது குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை குலதெய்வம் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள தனது வீட்டுக்கு 2 மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். இதற்காக மாடுகள் மற்றும் ரேக்ளா வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு […]

SA Women won by 5 wickets

தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. ஈஸ்ட் லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்தது. ஹர்லீன் டியோல் 46 ரன்னும் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் […]

திருடர்களை இனம் கண்டு தண்டனை வழங்க தயார்

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்று திருடர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியால் அதனை செய்ய முடியும் என ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று (02) மாலை அம்பாறை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கூறினார். மக்களின் சொத்துகளை திருடியதும், வீண்விரயமாக்கியதுமே இன்றையே முக்கிய பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு  கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர். தபால் திணைக்களத்தின் பாரம்பரிய […]