ஆபிரிக்க கண்டத்துடனான உறவைப் பலப்படுத்துதல்

தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான சட்ட முறைமை இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார். ஆபிரிக்க […]

75ஆவது சுதந்திர தினம்

இலங்கை திருநாட்டின 75ஆவது சுதந்திர தினம் பெரும் பெருமிதத்துடன் இன்று கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தின பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறுகின்றது. ஜனாதிபதி நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்ததுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுதந்திரதினத்தை முன்னிட்டு காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். அதேபோல் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.