நகரில் வாகனங்களின் சத்தம் பெரிதாக இருந்தால் அபராதம்

கனடாவின் எட்மோன்டன் நகரில் வாகனங்களின் சத்தம் பெரிதாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் பெரும் சத்தத்துடன் வீதியில் செலுத்தப்படும் வாகனங்கள் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் இதற்காக சட்டமொன்று நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எட்மோன்டன் நகரசபையின் உறுப்பினர் மைக்கல் ஜான்ஸ் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார். தற்பொழுது அதிக சத்தத்துடன் செலுத்தப்படும் வாகனங்களின் சாரதிகளுக்கு 250 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகின்றது. எனினும் இந்த அபராதத் தொகையை 1000 டொலர்களாக உயர்த்தப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் […]
கனடாவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் கனடாவின் தென் ஒன்றாரியோ பகுதியில் பனிப்புயல் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த முன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணத்திற்காக இவ்வாறு குதிரைகளை ஏற்றுமதி செய்வது தவறானது

தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதனை போன்று இறைச்சிக்காக குதிரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இறைச்சிக்காக குதிரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 2000 குதிரைகள் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஜப்பானுக்கு இந்த குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பிரபல கனடிய பாடகர் ஜான் அர்டன் என்பவரினால் குதிரைகள் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. […]
நிலநடுக்கம்

துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று(20), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கி நேரப்படி நேற்றிரவு(20) சுமார் 8.04 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் அதிகமானவர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 06ஆம் திகதி துருக்கியின் தென் கிழக்கு மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் 7.8 மெக்னிடியூட் அளவிலான சக்தி […]
புடின் குற்றம் சுமத்தியுள்ளார்

உக்ரேன் – ரஷய மோதலுக்கு ஐரோப்பிய நாடுகளே வித்திட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்ய மக்களுக்கு இன்று (21) ஆற்றிய விசேட உரையிலேயே புடின் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்ணுக்குத் தெரியாத சக்தியைப் பெற முயற்சிக்கின்றன என்றும் அவர் கூறுகறியுள்ளார். நேற்று உக்ரைன் சென்ற அமெரிக்க ஸனாதிபதி ஜோ பைடன் ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்ற […]
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உத்தரவின் பேரில் ஐ.சி.பி.எம். வகையை சேர்ந்த ஹவாகாய்-15 என்ற ஏவுகணையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விண்ணில் ஏவி சோதனை நடத்தியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 5,770 கிலோமீட்டர் உயரத்தில் 990 கி.மீட்டர் தொலைவில் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கியது. […]
பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளன

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத் தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற் […]
மூன்று கோடி பாடப் புத்தகங்கள் – கல்வி ராஜாங்க அமைச்சர்

2023 இன் புதிய கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில் நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளுக்குமாக 3000 கோடி ரூபா செலவில் மூன்று கோடியே 7 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் ஹோமாகமை களஞ்சிய சாலையிலிருந்து […]
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம்-GL

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் இன்று (20) நள்ளிரவு முதல் ஜனாதிபதிக்கு கிடைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரீஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஆகவே தனக்குள்ள குறித்த அதிகாரத்தை ஜனாதிபதி பாவிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார். கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி (Photos)

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் செல்வது சிக்கலானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நாடு பாரியளவு வருமானத்தை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார். கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை […]