நாங்க ரெடி: தசுன்

நியூசிலாந்துடனான எதிர்வரும் ஒருநாள் மற்றும் T20 தொடருக்கு  தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக்க தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து ஷனக்க கூறுகையில், “நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். மெத்திவ்ஸ் அணியில் இணைந்தது நல்ல விஷயம். இளம் வீரர்கள் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். அதே நேரத்தில் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெறுவது […]

சதொச நிறுவனம் அதிரடி

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூடு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விலை விபரங்கள் பின்வருமாறு… காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை […]

இது வெறும் ஆரம்பம் தான் – ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி… இன்றைய […]

VS எச்சரிக்கை

பதுளை வெவெஸ்ஸ தொழிற்சங்க பிரிவில் நீடித்த தொழிற்சங்க போராட்டத்துக்கு நேற்று தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது தொழிற்சாலை அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலைக்கு தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது. வெவெஸ்ஸ தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்தின் நிறை அதிகரித்தல் மேலதிகமாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தின் நிறைக்கு ஏற்றால் போல ஊதியம் வழங்கப்படாமை என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பிரச்சினைக்கும் நிர்வாகத்தின் ஏனைய கெடு பிடிகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது. மேலும் தோட்டத்தில் உள்ள […]

IMF கடன் வசதியின் முதல் தவணை கிடைக்கப்பெற்றது

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை கடந்த தினம் அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கல்வியற் கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகள் மார்ச் 30ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இதன்படி, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த 7500 ஆசிரியர்களையும் பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும்

இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைத் […]

கனடாவின் மக்கள் தொகை?

சமீபத்திய தரவுகளின்படி, கனடாவின் மக்கள்தொகை 2022 இல் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு நாட்டின் மக்கள் தொகையில் 1.05 மில்லியன் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அதாவது 95.9% பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. கனடாவின் மக்கள்தொகை அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. தற்போது, ​​கனடாவின் மக்கள் தொகை 39.5 மில்லியன் ஆகும்.

திடீரென்று மாயமான பெண்மணி

ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இருந்து திடீரென்று மாயமான பெண்மணி ஒருவர் தொடர்பில் மூன்று வாரங்களாக எந்த தகவலும் இல்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 3ம் திகதி மதியத்திற்கு மேல் சுமார் 8.30 மணியளவில் 53 வயதான இசபெல்லா டான் கடைசியாக காணப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பொலிசார் முன்னெடுத்துள்ள முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், இசபெல்லா டான் சம்பவத்தன்று உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்றே தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் உடற்பயிற்சி கூடம் செல்லாமல், […]

நோயாளி சுய நினைவில் இருக்கும் போது சத்திர சிகிச்சை

கனடாவின் கல்கரி பகுதியில் மருத்துவர் ஒருவர் மிகவும் சிக்கலான சத்திர சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். கனடாவில் இவ்வாறான ஒரு சத்திர சிகிச்சை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.   நோயாளி சுய நினைவில் இருக்கும் போது நோயாளியின் முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் மைக்கேல் யங் என்ற முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணர் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.   சத்திர சிகிச்சை நடைபெற்ற போது பெரிதாக […]