ராகுலுக்கு உடனடியாக பிணை?

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு […]
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக றொரன்டோ

கனடாவில் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக றொரன்டோ நகரம் பெயரிடப்பட்டுள்ளது. றொரன்டோ நகரம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பூட்டை பூச்சி தொல்லை அதிகமான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடனாவின் பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனமான ஒர்கின் கனடா நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் மூட்டைப் பூச்சி கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பட்டியலில் றொரன்டோ முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பட்டியலில் முதலாவது இடத்தை றொரன்டோவும், இரண்டாவது இடத்தை வான்கூவாரும், மூன்றாவது இடத்தை […]
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த கப்பல்

ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் லெய்த் என்ற பகுதியில் அமைந்த கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஆராய்ச்சி கப்பலான அதில் பயணிகள் இருந்து உள்ளனர். இந்நிலையில், கப்பல் திடீரென சரிந்தது. இதனால், கப்பலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சமடைந்து அலறினார்கள். இந்த சம்பவத்தில் சிக்கி, 25 பேர் வரை காயம் அடைந்தனர். அவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 பேருக்கு அந்த இடத்திலேயே வைத்து […]
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. […]
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம்.. – தமுகூ தலைவர்

அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம். எது எப்படி இருந்தாலும், அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு கூட்டம் கொழும்பு தெற்கு […]
தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவாகி உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
வௌ்ளிக்கிழமை முதலாவது நோன்பு…

நாட்டின் எந்த பகுதியிலும் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அதன்படி, ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
வலுவான சக்திவாய்ந்த இலங்கை…

மறைந்த பிரதமர் மகாமான்ய டி. எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணில் அடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்ற மறைந்த […]
இந்தியா போராடி தோல்வி

இந்திய அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்களால் வென்றுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என கப்பற்றியுள்ளது. சென்னையில் இடம்பெற்ற நேற்றைய மூன்றாவது ODI போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 270 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த இந்திய அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து […]
உகாண்டாவில் தற்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தற்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி, தற்பால் ஈர்ப்பாளர்கள் என அடையாளம் காணப்படுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், கடும் விதி மீறல்களில் ஈடுபடும் தற்பால் ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்னவே உகாண்டா உட்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தற்பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் புதிய நடவடிக்கையாக […]