சம்பள நிர்ணய சபைக்கு CWC தலைவர்

சம்பள நிர்ணய சபைக்கு தொழிலாளர்களின் புதிய பிரதிநிதியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். சம்பள நிர்ணய சபையின் 30 ஆவது ஒழுங்குமுறைக்கு அமையாக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் ஊடாக சபையின் ஆயுட்காலம் 31.12.2023 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் செந்தில் தொண்டமானும் புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஆயிரம் ரூபா சம்பளம் போதாதென இ.தொ.கா அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் வர்த்தமானி ஊடாக சம்பள நிர்ணய சபை புதிய உறுப்பினராக செந்தில் […]
வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.5 மக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு(21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 6.5 மக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் டெல்லி, ஶ்ரீநகர் மற்றும் காஷ்மீரில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.
புதிய சீர்திருத்த திட்டங்களில் கவனம் செலுத்துவது முக்கியம் (Photos)

நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுடன் நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னணியை இலங்கை […]
மேலும் வலுவடையும் நட்பு…

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் […]
அமைச்சரவை வழங்கிய அனுமதி

நாவலப்பிட்டி – பஸ்பாகே கோறளை, ஹைன்போர்ட் தோட்டக் காணியை வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கண்டி – நாவலப்பிட்டி, பஸ்பாகே கோறளையிலுள்ள 566 ஏக்கர்களுடன் கூடிய ஹைன்போர்ட் தோட்டக் காணி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கருத்திற்கொண்டு, குறித்த காணியில் 200 ஏக்கர் காணியை வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய ஆபத்தான இடங்களில் வசிப்பவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் […]
இந்த எண்கள் கொண்ட மருத்துகளை யாராவது வாங்கியிருந்தால்…?

கனடாவில் cystic fibrosis என்னும் பிரச்சினைக்கான மருந்து ஒன்றைத் திரும்பப் பெறுவதாக கனடா மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. என்ன காரணம்? Cystic fibrosis என்னும் அந்த பிரச்சினைக்கான Cayston என்னும் மருந்தே திரும்பப் பெறப்படுகிறது. 032168 மற்றும் 033357 என்னும் lot எண்கள் கொண்ட Cayston (aztreonam) மருந்து வைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் குப்பிகளின் சுவர்களில் கீறல்கள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி கீறல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மருந்துக்குள் கண்ணாடித் துகள்கள் கலந்திருக்கக்கூடும். ஆகவே, இந்த எண்கள் […]
கனடாவில் இனவெறி தாக்குதல்

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் சீக்கிய மாணவர் ககன்தீப் சிங் (வயது 21). இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ககன்தீப் சிங் தனது வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ககன்தீப் சிங் மீது ‘விக்’ உள்ளிட்டவற்றை வீசி அவரை தொல்லை செய்தனர். போலீசில் புகார் அளிப்பேன் என ககன்தீப் சிங் எச்சரித்த பிறகும் அந்த இளைஞர்கள் அவரை தொடர்ந்து துன்புறுத்தினர். இதில் […]
அமெரிக்காவில் திடீரென வீசிய பனிப்புயலால் பயங்கர பனிச்சரிவு

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஆஸ்பெனில் ஏராளமான பனிமலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு பனி மலையில் வீரர்கள் பலர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய பனிப்புயலால் அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்த வீரர்கள் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பத்திரமாக […]
வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் […]
அடுத்த சில வாரங்களில் ஊழியர்களை பணிநீக்க முடிவு – அமேசான் நிறுவனம்

டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார். […]