சந்ரிக்காவின் நிலைப்பாடு

நலலாட்சியில் குற்றங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸாரும் துஷ்பிரயோகர்களாக மாறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.    

இராணுவ பலத்தை வலுப்படுத்தும் இந்தியா

இந்தியா தனது இராணுவ பலத்தை வலுப்படுத்த தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் இலத்திரனியல் போர் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்கு அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த இராணுவ உபகரணங்கள் சுமார் 8.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து புதிய கொள்முதல்களும் இந்திய நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ளன. பாகிஸ்தானும், சீனாவும் இராணுவ பலத்தை வளர்த்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்தியாவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஊடக அறிக்கை…

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான T20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறிது காலத்திற்குப் பிறகு, இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் மீண்டும் T20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு  வாய்ப்பு வழங்க வேண்டும் – ராஜ் அசோக் தெரிவிப்பு.

மின் பட்டியலை உரிய நேரத்தில் குறிப்பிட்ட திகதியில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே சமயத்தில் பெருந்தோட்ட பகுதிகளிவ் மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். காரணம் வறுமானத்தில் குறைந்து நிற்கும் சமூகமாக இருப்பதால் இவ்வாறனதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் சபையில் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இக்கோரிகையில்  மின் கட்டணம் அதிகரிப்பினால் பெரும்பாலும் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட திகதிக்கு மின் பட்டியல்  வழங்க முடியாமல் போனால் […]

மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17)கைச்சாத்திடப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்குகின்றது. இதன்படி மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி வழங்கப்படவுள்ளது. புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம் […]

மெக்ரோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

பிரான்ஸில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதுடன், போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்தும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து தலைநகர் பாரிஸில் சுமார் 7,000 பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, […]

துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்ன காரணம்

கனடாவின் மேற்கு எல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் நகரில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற விவரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. இதுதொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறும்போது, ‘உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

“சதராவ தீபனீ” கௌரவிப்பு நிகழ்வு (Photos))

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தியலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட “சதராவ தீபனீ” என்ற கௌரவிப்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது. கலைப் படைப்புகளுக்குப் பங்களித்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியெல்ல, சிரில் விக்கிரமகே ஆகிய சிரேஷ்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, குமார திரிமாதுர, […]

Sri Lanka chose to field.

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதேவேளை, இன்றைய போட்டிக்கு நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக நிஷான் மதுஷ்க அழைக்கப்பட்டுள்ளார். நிஷான் மதுஷ்கவுக்கு இது முதலாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

New Zealand Vs Slc 2nd Test

இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி உள்ளூர் நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. நாளைய போட்டியில் நிரோஷன் டிக்வெல்லவுக்கு பதிலாக இளம் வீரர் நிஷான் மதுஷ்க இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.