விருது வழங்கும் நிகழ்வில் யுவதி ஒருவரினால் குழப்பம்

கனடாவில் எட்மோன்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அரை நிர்வாணமாக தோன்றிய யுவதி ஓருவரினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரபல பாடகி Avril Lavigne மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, பெண் ஒருவர் அரை நிர்வாணமாக மேடையில் தோன்றி கிறின்பெல்ட் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வலயத்தில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுப்பதனை எதிர்த்துள்ளார். மேலாடையின்றி தோன்றிய குறித்த பெண், உடலில் கிறின்பெல்ட் திட்டம் அபிவிருத்தி செய்வதனை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை எதிர்க்கும் வகையில் கிறின்பெல்ட் பகுதியை பாதுகாக்குமாறு கோரி உடலில் […]
மௌனிப்பது ஏன்? – VS

மலையகப் பெருந்தோட்ட நிலங்களை வெளியார் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் தோட்ட நிர்வாகம் சட்டங்களும் கேடுபடிகளும் தொழிலாளர்களுக்கு மட்டுமா ? நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பதுளை நமுனுகலை இதகல தோட்டத்தினுடைய பெருந்தோட்ட காணிகளை பலவந்தகமாக வெளியார் ஆக்கிரமித்துள்ளனர் நிலைமை அறிந்தும் தோட்ட நிர்வாகம் மௌனம் காக்கின்றது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தங்களுடைய நலனுக்காக மலசல கூடத்தை விஸ்தரிக்கவோ அல்லது […]
ஆர்ப்பாட்டம்…

வரி கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிராக நுவரெலியா – இராகலை நகரில் ஒன்று திரண்ட ஆசிரியர், அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரப்பாட்டத்தின் போது, கறுப்பு கொடிகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் ஈடுப்பட்டனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வரி சுமை என்பன மக்கள் மீது தான்தோன்றி தனமாக தினிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மறுபுறத்தில் மக்களின் அங்கிகாரமில்லாத ரணில் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை குழித்தோன்டி புதைத்து […]
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மலையக பல்கலைக்கழகம் பற்றிய புதிய அறிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்று இருப்பது தொடர்பாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மலையக மக்கள் இலங்கையில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு ஒதுக்கப்பட்ட இனமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது இலங்கை தொழிலாளர் […]
உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை வங்கியின் முழுமையான […]
ரயில்வே பொது முகாமையாளரின் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது தொடர்ச்சியான ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். ரயில் சேவை அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சேவைக்கு சமூகமளிக்காத அனைவரிடமும் அது பற்றி விளக்கம் கோரவிருப்பதாகவும் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இன்று(15) 20 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார். பெலிஅத்த, காலி, அவிசாவளை, கண்டி, ரம்புக்கனை, அளுத்கம […]
PMD முக்கிய அறிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நாடளாவிய ரீதியில் 265 இலங்கை வங்கிக் கிளைகள் மற்றும் 272 மக்கள் வங்கிக் கிளைகள் ஆகியன இன்று (15) இயங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வழமையான முறையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக 300 பெட்ரோல் மற்றும் டீசல் பௌசர்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
சாரதிகளற்ற புதிய ரயில்கள் அறிமுகம்

மின்சார சக்தியைக் கொண்டு இயங்கும் சாரதிகளற்ற புதிய ரயில்கள் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் சாரதிகளற்ற புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சாரதியற்ற ரயில்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து அறிந்து கொள்வதற்கு றொரன்டோ பயணிகளுக்கு ஒர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சுரங்கப் பாதை வழியாக இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் மணித்தியாலத்திறகு 30000 பயணிகளை போக்குவரத்து செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவை […]
ரொறன்ரோ படுகொலை வழக்கில் தொடர்புடைய தகவல் அளிப்போருக்கு 50,000 டொலர் வெகுமதி

ரொறன்ரோ படுகொலை வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்யும் பொருட்டு, போதுமான தகவல் அளிப்போருக்கு 50,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிசாரின் படுகொலை சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு மற்றும் ரொறன்ரோவில் குற்றங்களை தடுப்பு குழுவினர் ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை குறித்த வெகுமதி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான 30 வயது Kiarash Parzham தொடர்பிலேயே வெகுமதி அறிவித்துள்ளனர். ஜூன் மாதம் 15ம் திகதி சுமார் […]