அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தபால் சேவை தொடர்பில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அதன் கிளைகள் வழங்கும் சேவைகள் இன்றியமையாதவை என கருதி குறித்த வர்த்தமானி வெளியிடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலாவியில் அவசர நிலை பிரகடனம்

பிரெடி சூராவளி காரணமாக மலாவி நாட்டில் இதுவரை 99 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சூராவளி காரணமாக 134 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. குறிப்பாக அங்குள்ள பிளாண்டயர் என்ற பொருளாதார நகரம் சூராவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை இந்தியா வென்றது

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அஹதாபாத்தில் நேற்று முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்துள்ளது. என்றாலும் நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2:1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது. இதன்படி 4 ஆவது முறையாக போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை இந்தியா வென்றமை குறிப்பிடதக்கது. இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா சகலதுறை வீரார்களாக தெரிவாகினர். […]

சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும்

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். ஷி ஜின்பிங்கின் அனுபவமிக்க தலைமையின் கீழ், சீனா பல சவால்களை வெற்றிகொண்டு, பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அவரின் மூன்றாவது பதவிக்காலத்தில் சீனா நிச்சயமாக ஒரு புதிய பரிமாணத்திற்கான பாதையில் பயணிக்கும் என்றும் நம்பிக்கை […]

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால்…

” ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும். இதனால் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவேதான் மக்கள் நலன்கருதியே நாம் ஜனாதிபதியை ஆதரித்தோம். தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து வருகின்றன. இந்த அரசியலில் ஜீவன் தொண்டமான் பலமான அமைச்சராக இருக்கின்றார். அதன்மூலம் மலையகத்துக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிடைத்து வருகின்றன.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களுக்கு கூடாரங்களும், கதிரைகளும் வழங்கும் […]

10 ஆயிரம் வீட்டு திட்டமும் வெகுவிரைவில்- ஜீவன்

பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில்  ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை […]

மலையகத்தில் வெறிச்சோடிய வைத்தியசாலைகள்

அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (13) காலை 8 மணிமுதல் (14) காலை 8 மணிவரை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை மற்றும் பொகவந்தலாவ, மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளும் வெறிச்சோடியிருந்தன. வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அறிந்த பெருந்தொகையான நோயாளர்கள் முன்கூட்டியே வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட அதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பை அறியாத நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு […]

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம்

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (13) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமது நிறுவனம் தயாராக இருப்பதாக சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதற்காக, தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது […]

விமானங்களை குத்தகை அடிப்படையில் வழங்கிய நிறுவனம்….?

கனடாவின் விமான சேவையின் நான்கு விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையினால் இவ்வாறு வான்கு விமானங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. றொரன்டோ, எட்மோன்டன் மற்றும் வாட்டர்லூ போன்ற பகுதிகளில் இவ்வாறு விமானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நியூயோர்க்கை மையமாக கொண்ட ஹெட்ஜ் பன்ட் நிறுவனத்தினால் கனேடிய விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கனடாவின் இயங்கி வரும் ப்ளயார் எனப்படும் விமான சேவை நிறுவனமே இவ்வாறு கடன் செலுத்த முடியாத நெருக்கடி […]

டேடிங் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமான ஆண்களிடம் கொள்ளை

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் இணைய வழி டேடிங் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமான ஆண்களிடம் 18 வயது யுவதி கத்தி முனையில் கொள்ளையிட்டுள்ளார். இணைய வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட ஆண்களை மால்டன் பகுதிக்கு அழைத்து, அவர்களிடம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு வேறும் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஜெஸ்மின் ஹோங் என்ற 18 வயது யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த யுவதி மீது கொள்ளைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.