உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகு

ஈரான் நாட்டில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது. புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த படகிற்கு ‘சுல்பிகார்-கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் இராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ் என்ற பெயரில் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளதாகவும் […]

டிக் – டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா தடை

அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இளைஞர்கள் இடையே அதிகம் பிரபலமான டிக் – டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதித்தன. அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. பெல்ஜியம் அரசாங்க அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

நாணய மாற்று கடைகலில் கைவரிசை காட்டிய மூன்று இளைஞர்கள்

கனடாவின் பீல் பிராந்தியத்தில் நாணய மாற்று கடைகலில் துப்பாக்கி முனையில் கைவரிசை காட்டிய மூன்று இளைஞர்கள் மீது டசின் கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கொள்ளை தொடர்பாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், மார்ச் 2 முதல் மார்ச் 9 வரை இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தொடர்புடைய கடைகளில் பணத்தாள்களை மட்டுமே அவர்கள் இலக்கு வைத்ததாகவும், அதன் பின்னர் திருட்டு வாகனங்களில் அவர்கள் மாயமாகியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த […]

ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம்

இந்த வார இறுதியில் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் 12ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும். பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு தோறும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது.

கிங்ஸ்டன் சாலை அருகே பெண் ஒருவர் சடலம்

ஸ்கார்பரோ மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு மற்றும் கிங்ஸ்டன் சாலை அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரொறன்ரோ பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை மீட்டுள்ளதாகவும், ஆனால் முதலுதவி அளிக்கும் போதே அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை […]

மேலும் பலரை பணிநீக்கம் செய்த பேஸ்புக்கின் தாய் நிறுவனம்

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில், தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய டெக் […]

ஜேர்மன் துப்பாக்கி சூடு – திடுக்கிடும் தகவல்

ஜேர்மனில் நேற்று சமய வழிப்பாட்டு தலம் ஒன்றில் 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில் அதனை நடத்திய நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது துப்பாக்கிதார் ஒரு மன நோயாளி என ஜேர்மன் பொலிஸார் அறிவித்துள்ளனர். 35 வயதான அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கி பிரயோகத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தடைந்ததாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அங்கு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 75 சதவீத பெண் பத்திரிக்கையாளர்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ‘டோலோ நியூஸ்’ என்ற செய்தி ஊடகத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஊடகவியலாளர் சோனியா நியாஸி தொகுத்து […]

நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில் கோர விபத்து

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தின் தலைநகர் இகேஜாவில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் சென்றது. இந்த பஸ் அங்குள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முற்பட்டது. ஆனால் அப்போது அங்கு ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. அதனை பஸ் டிரைவர் கவனிக்காமல் சென்றதால் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் தண்டவாளத்தில் இருந்து பஸ் தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]

வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. அதுபற்றிய வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிமனான அளவுள்ள, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் போன்ற உயிரினம் படர்ந்து காணப்படுகிறது. அதனால், வானில் இருந்து புழுக்கள் ஏதும் நம் மீது விழுந்து விட கூடாது என்பதற்காக சிலர் குடை பிடித்தபடியே பாதுகாப்பாக […]