மலையக இளைஞர் – யுவதிகளுக்கு விஷேட தொழிற்பயிற்சித் திட்டம்

பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள மாணவர்கள் (OL) சாதாரண தரத்தின் பின்னர் உயர்தரத்துக்கு செல்லமுடியாத நிலையில்  தொழிலின்றி அவலப்படுவதை காணமுடிகிறது. இத்தகைய இளைஞர் யுவதிகளை இனம்கண்டு கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஊடாக அவரவரின் திறமைக்கேற்ப தொழிற்பயிற்சிகளை வழங்க விஷேட திட்டமொன்றை முதற்கட்டமாக 11 ஆம் திகதி சனிக்கிழமை பதுளை மாவட்டத்தில் ஆரப்பித்து வைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, […]

ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார்

பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்திற்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தெரவித்துள்ளது. ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார் எனவும் நேற்று விஜயராமயில் கூடிய பொதுஜன பெரமுண தீர்மானித்ததாக பா.உ ரோஹித் அபேகுணவர்தன கூறியுள்ளார். அதேபோல் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

$1 billon

1 பில்லியன் ($1 billon ) அமெரிக்க டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க, இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதுவரை பெறப்பட்ட கடன் வசதியில், மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“அவள் நாட்டின் பெருமை”

சர்வதேச மகளிர் தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டு இந்நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. வேலை நேரத்தை குறைக்கவும் கொடுப்பனவை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 தொழில் புரியும் பெண்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி பேரணியொன்றை நடத்தினர். இந்த நாளை, அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி அறிவித்தது. சமூகம், அரசியல், பொருளியல் போன்ற […]

தபால் மூல வாக்கெடுப்பு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிடம் வினவியபோது, ​​எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று […]

IMF: பதில்…

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதி முதலாம் தவணைத் தொகையை வழங்குவது தொடர்யத்தின்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். வருமானம் ஈட்டும் போது […]

சீன எக்ஸிம் வங்கியின் நிதி உத்தரவாதக் கடிதம் கையளிப்பு

சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் சீன பெரு நிறுவனங்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் பிரதித் தூதுவர் தெரிவித்தார். இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

ஏப்ரல் 25 உள்ளூராட்சி மன்ற தேர்தல்?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்             ஆ​ணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தேர்தலை நடத்துவதற்கு சாதகமான தினமாக ஏப்ரல் மாதம் 25 […]

உடனடி நடவடிக்கை

தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அன்னமலை – 01, அன்னமலை – 02,  நாவிதன்வெளி – 01, சவளக்கடை, சாளம்பைக்கேணி – 03 , சாளம்பைக்கேணி – 04, […]

நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க 45 நிமிடங்களுக்கு முன்னர், முதல் வகுப்பு பகுதியை ஒட்டிய அவசரகால கதவு திறந்திருக்கிறது என விமானிக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, விமான ஊழியர் அந்த பகுதியை ஆய்வு செய்ய சென்றார். அப்போது, சந்தேகத்திற்குரிய 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]