பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் ஆட்சிதான் காரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார் இதனிடையே பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் ஆட்சிதான் காரணம் என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். போது முதல் அவர் தற்போதைய பிரதமர் […]

நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ள சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் ஐ.நா.வில் பேசும்போது, மகளிர் மற்றும் சிறுமிகள் பலனடைவதற்காக புதிய தொழில் நுட்பங்களை குவித்து புதிய இந்தியாவானது இன்று இயங்கி வருகிறது. பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டுமே இனி பார்க்கப்பட கூடாது. அவர்கள் நாட்டை கட்டமைப்பவர்களாகவும் பார்க்கப்பட வேண்டும் என சந்தேகமேயின்றி தெரிவித்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக கொண்டு இது செயல்படுகிறது. இந்தியா இன்று, […]

கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள் கின்னஸ் சாதனை

ஆகக் குறைந்த நாள்களில் பிறந்த இரட்டையர்களாக கனடாவைச் சேர்ந்த ஏடியா மற்றும் ஏட்ரியல் சகோதரர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். கரு முழுமையாக முதிர்வுறாமல் 22 வாரங்களிலேயே பிறந்து, பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாக இருக்கும் நிலையில், ஏடியாவும் ஏட்ரியலும் 18 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டனர். அதாவது குழந்தைகள் இருவரும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது 2022 மார்ச் 4ஆம் திகதி பிறந்தனர். கையை விரித்த மருத்துவமனை நிர்வாகம் கருவுற்று 21 வாரங்கள் ஐந்து நாள்களிலேயே […]

வவுனியா: அதிர்ச்சியில் மக்கள்

வவுனியா குட்செட்வீதி, உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவம் தொடர்பாக […]

பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம்

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனி தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அந்த எச்சரிக்கைகள் இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இவ் ஆண்டி அதிக குளிர்ச்சியான வெப்பநிலையை நாடு சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம். வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்தின் சில பகுதிகள், வடகிழக்கு இங்கிலாந்து, தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் என பிரித்தானியாவின் பெரும் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனி காரணமாக […]

கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவோரின் உயிருக்கு ஆபத்து

சட்டப்படி விமானம் ஏறி கனடாவுக்கு வரும் மெக்சிகோ நாட்டவர்கள், பின்பு கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே செல்ல முற்படுகிறார்கள். இந்தியக் குடும்பம் ஒன்று நடந்தே கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதாவது நேரடியாக அமெரிக்காவுக்குள் செல்லாமல், கனடாவுக்குள் நுழைந்து, பின் கனடா அமெரிக்க எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் மக்கள். தற்போது, மெக்சிகோவிலிருந்து இதுபோல் அமெரிக்காவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதாவது, ட்ரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் உயரமான உலோகத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது […]

 கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

 கொட்டாஞ்சேனையில் இன்று(07) காலை 9.30 அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது காரொன்றில் வந்த குழுவினரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின்  இலங்கைக்கான விசேட தூதுவர் “ஜீபி” என்றழைக்கப்படும் கோபாலசுவாமி பார்த்தசாரதி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை  நேற்று கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்திய தூதரக இரண்டாம் செயலாளர் அசோக்குமார் உடனிருந்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி கூறியதாவது,  கொடுமையான நாட்களில் இலங்கை, இந்தியா, தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய அனைத்து தரப்புகளுக்கும் இடையே இயன்ற வரையில் நெகிழ்வு தன்மையுடன் சுழன்றோடி நம்பிக்கை தந்த கடும் பணிகளை ஆற்றியவர், திரு. கோபாலசுவாமி பார்த்தசாரதி. அந்த கொடும் நாட்களை கடந்து […]

ஏற்பதா? இல்லையா?நீங்களே முடிவு செய்யுங்கள்?

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக்  கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்கள் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி […]

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணி

இலங்கை அணிக்கு எதிரான 13 பேர் அடங்கிய டெஸ்ட் குழாத்தை நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணிக்கு தலைவராக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். அணி விபரம் சௌதி – தலைவர் டீம் சவுதி – தலைவர் டொம் ப்ளண்டெல் பிளேர் டிக்னர் நீல் வோக்னர் ஸ்கொட் ஸ்காட் குகெலெகின் ஹென்றி நிக்கோலஸ் கேன் வில்லியம்சன் வில் யேங் மைக்கல் பிரெஸ்வெல் டெவோன் கொன்;வே மேட் ஹென்றி டோம் லெதம் டேரல் மிட்செல் இரு அணிகளுக்கும் இடையிலான […]