யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் – CV

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அண்மைக்காலமாக மகாசங்கம் பற்றிய உங்களது கருத்துக்கள் சிங்களவர்கள் மத்தியில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மகா சங்கத்தினரை விமர்சிப்பது புத்திசாலித்தனமா? […]
கிரீஸ் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு

கிரீஸ் ரயில் விபத்தில் பலியானோருக்காக அந்நாட்டு பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மிஸ்டோடாகிஸ் வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்றும் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கோருகிறேன். இது துயரமான மனித தவறு ஆகும் என பதிவிட்டுள்ளார். இந்த கோர விபத்தில் 57 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
ரஷியாவின் எஸ்-300 ரக ஏவுகணை நடத்திய தாக்குதலில்உக்ரைனில்11 பேர் பலி

உக்ரைனில் ஜபோரிஜ்ஜியா நகரை இலக்காக கொண்டு குடியிருப்பு மீது ரஷியாவின் எஸ்-300 ரக ஏவுகணை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். கீவ், உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடக்கிறது என கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா – உக்ரைன் போர் குறித்து வீடியோ

ரஷியா – உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை […]
பாகிஸ்தானில் ஒருவரை ஒருவர் சுட்டு கொண்டதில் நடந்து உள்ள மரணங்கள்

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் ஷகாப் கேல் பகுதியை சேர்ந்தவர் பக்ஷீஷ். இவரது மனைவி மிஸ்மா. இந்த தம்பதிக்கு கான் ஜயீப் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளி கிழமை திடீரென தனது மனைவி மிஸ்மாவிடம் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் தகராறு முற்றியதில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மிஸ்மாவை நோக்கி […]
பனிப்புயல் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

டொரன்டோ நகரின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16 மணித்தியாலங்களில் சுமார் 30 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பனிப்புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பனிப்புயல் ஏற்படக்கூடிய பிரதான வீதிகளுக்கு அருகாமையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன தரிப்பு தொடர்பிலான சட்ட […]
பனிப்பொழிவு ஏற்பட்ட வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து

ஸ்காப்ரோவில் பனிப்பொழிவு ஏற்பட்ட வீதியில் வாகனத்தை செலுத்திய போது இடம் பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றும் சில வாகனங்களுடன் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. 41-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. வாகன விபத்து சம்பவத்துடன் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 47 வயதான வாகன சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த […]
உக்கிரேனுக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி

கனடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் கனடாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்கிரேனுக்கு விஜயம் செய்துள்ளார். கனடிய பாதுகாப்பு படைகளில் பிரதானி ஜெனரல் Wayne Eyre இவ்வாறு தலைநகர் கியூவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஷயத்தின் போது அவர் உக்ரேன் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய உள்ளார். ரஷ்யாவிற்கும் உக்கிரேனிற்கும் இடையில் இடம்பெற்று வரும் போரின்போது உக்ரேனுக்கு, கனடிய அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது. ஆயுதங்கள் உள்ளிட்ட பல வழிகளில் இந்த உதவிகள் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரின் லாகுரில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முன்னாள் பிரதமருக்கு, சட்டவிரோதமாக பரிசுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்யுமாறு நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத் பொலிஸ் அதிகாரிகள் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 4,743 ரூபாவுக்கும் 5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 1,904 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. 2.3 கிலோ கிராம் எடையுடைய கேஸ் சிலிண்டர் 883 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.