இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை (PHOTOS)

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்களுடன் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் […]
நேரம் இது – ஜோ பைடன்

அமெரிக்காவின் நாஷ்வில் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 28 வயதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது 03 பிள்ளைகளும் 03 பாடசாலை ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதைதொடர்ந்து சிறு வணிக நிர்வாக மகளிர் வணிக உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது. பள்ளியில் நடந்த துப்பாக்கி […]
‘நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023

“கொரோனாவின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுக்கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் வைத்தியத் துறையின் பயன்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய வைத்தியத் துறையில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குப் பின்னர் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள் தொடர்பில் அப்போலோ வைத்தியசாலை (Apollo) வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் (26-03-2023) சென்னையில் சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ வைத்தியசாலையின் சார்பில் ‘நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023 நடைபெற்றுள்ளது. வைத்தியசாலையின் மூத்த […]
இஸ்ரேல் பிரதமர் எடுத்த அதிரடி முடிவு

மக்களிடையே பிளவு ஏற்படுவதை தடுப்பதற்காக நீதித்துறை மறுசீரமைப்பு சட்டத்தை இடைநிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார். நீதித்துறை சட்ட மறுசீரமைப்பிற்கு எதிராக இஸ்ரேலில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம் நீதிமன்றத் தீர்ப்புகளை பெரும்பான்மையுடன் புறக்கணிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டிருந்தது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஜனவரி 4ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டதில் இருந்து இஸ்ரேலின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, நீதி அமைப்பை […]
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலையில் இடம் பெற்றுள்ளது. பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 61 வயதுடைய இருவரும் 60 வயதான ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 28 வயதான அவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி […]
இரண்டாவது ODI

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ODI போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின், கிறைஸ்ட்சேர்ச் இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இன்று காலை முதல் மழை குறுக்கிட்டதால் போட்டியை ஆரம்பிப்பதற்கு தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதாக போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாண தலைநகர் பேடன் ரூஜில் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் காரில் தப்பி சென்ற நிலையில், பொலிஸாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர். பேடன் ரூஜ் நகரின் மேற்கு பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் […]
கிளென்டேல் இடைநிலைப் பாடசாலை மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல்

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டனில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மீது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார இடைவெளியில் இரண்டு தடவைகள் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையொன்றுக்கு ஒரு வார இடைவெளியில் இரண்டு தடவைகள் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறான குண்டு அச்சுறுத்தல் என்பது பற்றிய விபரங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை. கிங்ஸ் வீதி மற்றும் நாஷ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிளென்டேல் இடைநிலைப் பாடசாலை மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்திலும் குண்டுத் […]
29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம்

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது. திம்பிரிகசாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட, நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி, தெமட்டகொட, மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் 995 பயனாளிகளுக்கும், நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை சனசமூக மண்டபத்தில் 448 பயனாளிகளுக்கும், வெள்ளவத்தை ரஞ்சன் […]