ராகுல் காந்தியின் பதவி குறித்து எடுக்கப்பட்ட முடிவு

மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார். இதையடுத்து ராகுல் எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற […]

ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ள கனடாவும் அமெரிக்காவும்

எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன. அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய இருக்கின்றன. இரண்டு குழந்தைகள் உட்பட, இந்தியக் குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழையும் முயற்சியில் எல்லைப்பகுதியில் உயிரிழந்துகிடந்த சம்பவம் நினைவிருக்கலாம். அதாவது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து […]

12 வயதான சிறுவன் கத்தி குத்து தாக்குதல் முயற்சி

கனடாவில் 12 வயதான சிறுவன் ஒருவன் நபர் ஒருவரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடமிருந்த கணனியை கொள்ளையிட முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. டர்ஹம் பிராந்தியத்தின் பிக்கரிங் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கத்தியையும் மீட்டு எடுத்துள்ளனர். கத்தி குத்து தாக்குதல் முயற்சி மேற்கொண்ட தினத்திற்கு முதல் நாளில், இந்தச் சிறுவன் கடையொன்றிலிந்து கணனியை களவாட முயற்சித்துள்ளார். கொள்ளை, ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் […]

கனடாவில் இளைஞர் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது

கனடாவில் இளைஞர் ஒருவர் அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கு அமைய பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொன்றியலைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தினால் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொஹமட் அமீன் அஸால் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் குறித்த நபரை பொலிஸார் பின்னர் பிணையில் விடுதலை செய்துள்ளனர். பாடசாலை தேவைகளை தவிர்ந்த […]

தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு

தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அவர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் […]

மியான்மரில் தேசிய நெடுஞ்சலையில் லாரி மோதி விபத்து

மியான்மரில் உள்ள யங்கூன்-மண்டலாய் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையின் ஓரம் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதனை கவனிக்காத மினி லாரி டிரைவர் லாரியின் பின்புறமாக மோதினார். இதில் மினி லாரியில் இருந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 11 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்த […]

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி எங்கு தெரியுமா?

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் நடத்தாமல் இருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானுக்கு வெளியே நடைபெறும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் விரிசல் காரணமாக இந்திய […]

அமெரிக்காவில் பனிப்புயல்

அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன. இந்த பனிப்புயலில் 700க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் 2 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடும் குளிர் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,        

சர்வதேச நிதி உதவிகள் பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம்

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள்  மூலமான “வறுமை நிவாரணங்கள்” பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும்,  சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பில் நான் மகிழ்கிறேன். அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள், என எதிரணி எம்பீக்கள், பன்னாட்டு தூதுவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாட்டில் எதிரணி எம்பிக்கள், இலங்கையிலிருந்து செயற்படும் […]

வான்வழித் தாக்குதல்கள்

சிரியாவின் பல பகுதிகளில் நேற்று (23) இரவு அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவுப் போராட்டக் குழுக்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கக் கூலிப்படை ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் காயமடைந்ததை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிரியாவின் ஹசாகா நகரில் அமெரிக்க இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.