கனேடிய நிர்வாகம் தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்……

பிரிட்டன் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் தந்தை, இந்த விவகாரத்தில் கனேடிய நிர்வாகம் தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், பீல் பிராந்திய பொலிசாரும் தொடர்புடைய வழக்கில் கனேடிய நபரின் ஈடுபாடு குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 22 வயது டாம் பார்ஃபெட் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக […]

கனடிய மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் நடவடிக்கை

சூடானில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். கனடியர்களை சூடானிலிருந்து மீட்பதற்கு பல்வேறு வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சூடானிலிருந்து இதுவரையில் சுமார் 375 கனடியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய இராணுவ விமானங்கள் மற்றும் நேச நாடுகளின் விமானங்கள் என்பனவற்றின் மூலம் இவ்வாறு கனடியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கனடிய மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனித ஆனந்த் தெரிவித்துள்ளார். சுமார் 300க்கும் மேற்பட்ட […]

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வரலாறு காணாத மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் நாட்டு மக்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைகும் வகையில் அரசு கொண்டு வரும் சட்டம் […]

டுவிட்டரின் புதிய கட்டணத் திட்டம் பற்றி பயனர்களுக்கு குழப்பம்

டுவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பேற்ற எலான் மஸ்க் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் டுவிட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்” என்று […]

சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிற பதைபதைக்கும் வீடியோ

அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் நகரத்தில் அமைந்துள்ள கார்ட்டர் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள் பயணிக்கும் வண்டியை உடனடியாக நிறுத்த முயற்சித்து வண்டியை நிதானமாக இயக்கி இருக்கிறார். இருந்த போதும் அவரால் முடியவில்லை. உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். செய்தியைக் கூறிய சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். வண்டி போக்குவரத்து மிகுந்த சாலையில் […]

சூரிய ஔி உடலுக்கு அவசியம்

நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். விட்டமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். சூரிய ஔியின் மூலமே மனித […]

“டெங்கு…”

நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் சூடான் மோதல்…

சூடானில் சட்டவிரோத ஆயுத,குழுக்களுக்கும் சூடான் இராணுவத்திற்கும் இடையிலான மோதல்கள் நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன. வன்முறை மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரசாங்கத்தின் ஆதரவுடன் தற்போது சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. சூடானில் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று […]

மீண்டும் காலி இலக்கிய விழா

பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக, பல்வேறு கலை அம்சங்கள் அடங்கிய தொடர் நிகழ்ச்சிகளை காலி, மாத்தறை, அஹங்கம மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. […]

இலங்கைக்கு எதிர்காலத்தில் சீனாவின் ஆதரவு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு எதிர்காலத்தில் சீனாவின் ஆதரவை தொடர்ந்தும் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹாங்க் கூறியுள்ளார். கண்டி ஸ்ரீ சந்தானந்த வித்தியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.