பிரான்ஸில் வாகன சாரதிகள் குறித்து…………..

பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவதாக தெரியவந்துள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த விடயம் தெரியவந்துள்ளது. இன்னும் துல்லியமாக, 42% சதவீதமானோர் அதிவேகமாக பயணிக்கின்றனர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் 130 கிலோ மீற்றர் வேகம் உள்ள சாலைகளில் 137 அல்லது 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர்.இவர்களில் 3% சதவீதமானவர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர். இதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டில் 38% சதவீதமானோர் குறிக்கப்பட்ட […]

மாயமான நீர்மூழ்கிக் கப்பல் பயணித்த ஐவரும் உயிரிழப்பு

அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலில் திடீரென மாயமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல் மாயமான நிலையில், அதனை தேடும்பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் டைட்டானிக் […]

கடன் மறுசீரமைப்பை ஒரு பிணைப்பு செயல்முறை மூலம் செய்ய முடியாது

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை ஒரு பிணைப்பு செயல்முறை அல்லது பொதுவான பொறிமுறையின் மூலம் செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “தற்போதைய உலகம் எதிர்நோக்கும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது” என்ற தொனிப்பொருளில் பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

35 மில்லியன் கனடிய டொலர்களை பரிசாக வென்றெடுத்த இலங்கையர்

கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் சுமார் 8170 மில்லியன் இலங்கை ரூபா பணப்பரிசு வென்றெடுத்துள்ளார். ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற நபரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.ஜயசிங்க என்ற நபரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் ஜயசிங்க 35 மில்லியன் கனடிய டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார். கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜாக்பொட்டி பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் […]

டைட்டானிக் நீர்மூழ்கி: சடலங்களை கண்டுபிடிப்பது கடினம்

டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி அதில் இருந்த ஐந்து பயணிகளும் இறந்ததை அமெரிக்க கடலோர காவற்படை உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இறந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பது கடினம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிய அளவிலான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலுடன் போலார் பிரின்ஸ் கப்பல் கிழக்கு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணத்தைத் தொடங்கியமை குறிப்பிடதக்கது.

உக்கிரேனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது – கனடா

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி உக்கிரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் இறுதியில் ராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளார். எனினும் உக்கிரேனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது இருப்பதனை தடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு கனடா உதவி செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி பதினெட்டு மாதங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உக்ரேனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடாவும் நேட்டோ கூட்டுப் படையும் ஆதரவு வழங்க வேண்டும் […]

இந்தியா வளரும்போது உலகம் சேர்ந்தே வளரும்

இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகம் முழுவதும் சேர்ந்தே வளரும் என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள மோடி ஜனாதிபதி பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்தில் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் சமீபத்திய நிலைமையை IMF விளக்குகிறது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை பாரிஸ் உச்சி மாநாட்டுடன் இணைந்து சந்தித்தார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க அரசின் வலுவான முயற்சிகளால் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக நிதி நிதி தொடர்ந்து உறுதியளிக்கும் என்றும் கூறினார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். ஜூன் 22 மற்றும் […]

நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் நடைபெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு சபை அதிகாரிகள், கொழும்பு துறைமுக நகர் ஆணையாளர், பெருந்தோட்ட மனித […]

டைடான்க்கை தேட சென்றவர்கள் பற்றிய கவலையான செய்தி

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க கடலோர கடற்படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் […]