எதிர்வரும் நாட்களில் விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் நளின்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேபோல் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையன நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்பும் அந்த சலுகைகளின் நலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் […]

நல்லிணக்க முயற்சிகள் தொடரும்: ஜனாதிபதி

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாபருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க […]

சீன-அமெரிக்க பிரச்சினைக்கு ரஷ்யாவும் பதிலடி

அமெரிக்க – சீன உறவைவ பேண பிளிங்கன் முயற்சிககும் போது அதற்கு விரோதமாக ஜனாதிபதி பைடன் செயற்படுவது நல்லதல்ல என ரஷ்ய வெளியுறவு பேச்சாளர் தெரிவித்துள்ளார். பைடன் போக்கை புரிந்துக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பைடனின் கூற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ரஷ்ய வெளியுறவு பேச்சாளர் கூறியுள்ளார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஜனாதிபதி பைடனின்  கூற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்று  கூறியுள்ளார். சீனாவில் எந்த மாதிரியான அரசு அமைய வேண்டும் என்பதை சீன […]

மியான்மர் நாட்டில் 3 முறை நிலநடுக்கங்கள்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் ஆகும். அதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னர், 2-வது நிலநடுக்கம் […]

அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

விலங்குகளின் செல்களில் இருந்து உருவாக்கப்படும் செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்குமாறு இரு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் பல்வேறு நாடுகளில் செயற்கை மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை […]

பாரிஸ் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என்று அதிரடிப்படையினர் தேட ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் வெடிப்புக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து

கனடாவின் பிக்கரிங் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிக்கரிங் 401 அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த ட்ரக் வண்டியானது எதிரில் வந்த ட்ரக் மற்றும் பயணிகள் வாகனமொன்று என்பனவற்றுடன் மோதுண்டுள்ளது.இந்த சம்பவத்தில் ட்ரக் வண்டிகளின் சாரதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மூன்றாவது வாகனமும் தீப்பற்றிக் கொண்டதாகவும் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் […]

கனடாவில் கடையை உடைத்து களவாடப்பட்டுள்ள மதுபானம்

கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500 டொலர் பெறுமதியான மதுபான வகைகள் கனவாடப்பட்டுள்ளன. றொரன்டோவின் காக்ஸ்வெல் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையில் அதிகாலை வேளையில் இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரண்டு நபர்கள் கடையை உடைத்து உள்ளே புகுந்து சில வகை மதுபான போத்தல்களை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மதுபானம் களவாடிய நபர்களுடன் பெண் ஒருவரும் இருந்தார் என […]

விலை நிர்ணய சதியில் ஈடுபட்ட கனடா பிரட் நிறுவனம்

கனடாவில் முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. கனடிய வரலாற்றில் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மீது விதிக்கப்பட்ட அதிகட்ச அபராத தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் போட்டி […]

உலகில் வாழத் தகுதியான 10 நகரங்கள்…

உலகில் வாழத் தகுதியான நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை “”The Economist”” வெளியிட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான நகரமாகப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, ​​உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை  உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன. தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கல்கரி, சுவிட்சர்லாந்தின் […]