முதலாம் ஆண்டுக்கான புதிய பாடம்

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட உரையொன்றை ஆற்றிய அமைச்சர், அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜப்பானிய சந்தையை இலக்காகக் […]

பைடன் இந்தியா தொடர்பில் அதிரடி முடிவு

இந்தியர்கள் அமெரிக்கா வந்து பணிபுரிந்து குடியேறுவதை எளிதாக்க பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் தொடர்பாக, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சில இந்திய தொழிலாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடியும். அது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று (22) வெளியிடவுள்ளது. அதன்படி, எச்-1பி விசாவில் நாட்டிற்குள் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் போதே […]

சீனாவில் உணவகம் ஒன்றில் வெடி விபத்து

சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 8.40 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. பார்பிக்யூ உணவகம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. திரவ எரிவாயு கசிவு காரணமாக இந்த […]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவை வழங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைக்கும் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரம்…

இசை நிகழ்ச்சிகளுக்கான இரவு 10 மணி வரையிலான காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம். சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத ஸ்தலங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து இசை நிகழ்ச்சிகளை நியாயமான தூரத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெரிஸ நகரில் வெடிப்பு

பிரான்ஸ் தலைநகர் பெரிஸ நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? என்று அதிரடிப்படையினர் தேட ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டிற்கான Slc நிதிநிலை அறிக்கை

2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, Sri lanka கிரிக்கெட் அந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா நிகர உபரியாக பதிவு செய்துள்ளது. அந்த வருடத்தில் கிரிக்கெட்டின் மொத்த வருமானம் 17.5 பில்லியன் ரூபாவாகும் எனவும், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 120 வீத வளர்ச்சி எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கணக்கு அறிக்கை கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட […]

ஏற்றுமதி விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம்

விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.. அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விவசாய தொழிற்துறைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தமையால் இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று […]

பைடனுக்கு ஜின்பிங் பதில்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்கு சீனா பதிலளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் மேற்படி கருத்து ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை மேலும் சீர்குலைக்கும் என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிக்கை பொறுப்பற்றது மற்றும் அரசியல் ரீதியாக வெறுக்கத்தக்கது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வெளிப்படையான போரைத் தணிப்பதற்காக […]

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய்

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை போக்குவரத்துச் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளது என மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் […]