நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவது அவசியம்
ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும் என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்தார். ”டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும் நோயளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே […]
ரஷ்ய ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகம்?
கடந்த வார இறுதியில் வாக்னரின் படைகள் ரஷ்யாவில் உள்ள ஒரு நகரத்தைக் கைப்பற்றியபோது உலகமே அதிர்ச்சியடைந்தது. இது உலக மசகு எண்ணெய் சந்தையையும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இன்று (26) மசகு எண்ணெய் விலை சிறிதளவு அதிகரித்துள்ளதோடு, ரஷ்ய ரூபிளின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது. கூலிப்படை தாக்குதல்கள் ரஷ்ய ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பியதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மலையக வீடமைப்பு திட்டம் – விசேட கலந்துரையாடல்
மலையக வீடமைப்பு திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பங்குபற்றலோடு நடைபெற்றது. அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.தீப்தி, திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் வஹாப்தீன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, அமைச்சின் அதிகாரிகள் […]
இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு…
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றில் B குழுவின் கீழ் போட்டியிட்ட இலங்கை, ஸ்கொட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. குரூப் ஏ கீழ் போட்டியிட்ட மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் சிம்பாபே அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன்படி இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து, சிம்பாபே ஆகிய அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு தெரிவாகின. உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்கான தகுதிச் […]
யார் இவர்கள்?
வாக்னர் கூலிப்படை பிரிவு என்பது ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் சுமார் 25,000 வீரர்களைக் கொண்ட குழுவாகும். அவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய அரசாங்கத்தை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தனியார் இராணுவ நிறுவனம் என அறியப்படும் ரஷ்ய சார்பு வாக்னர் கூலிப்படை குழு முதலில் 2014 இல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரகசியமாக நடத்தப்பட்ட வாக்னர் குழு பல ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் சிரியா, லிபியா, மாலி உள்ளிட்ட 6 […]
‘அஸ்வெசும’ – பயனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பபடாது
பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் […]
டெங்கு:விசேட சுத்திகரிப்பு- சுகாதார இராஜாங்க அமைச்சர்
எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவியும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு நுளம்பு குடம்பிகளை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். டெங்கு நோய் பரவலைக் […]
சுரங்கப் பணியின் போது எதிர்பாராமல் நடந்த வெடிவிபத்து
தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 18-ஆம் தேதி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், […]
கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரை சந்தித்த மோடி
பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு சென்றார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி அழைப்பின் பேரில் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார்.பிரதமர் மோடி எகிப்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடியை கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான தாரெக் ஹெக்கி சந்தித்தார். உலகளாவிய புவிசார் அரசியல், எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. […]
காரிருளையும் விட பயங்கரமான ஆபத்து
டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ உள்ளிருந்தே வெடிப்பு நிகழ்ந்து விபத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.கடலின் மேற்பரப்பிலிருந்து 4000 மீட்டர் ஆழத்திற்குச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கே பல அசம்பாவிதங்கள் நடக்கலாம்.மிகக் குறிப்பாக டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 மீட்டர் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அத்தனை பெரிய ஆழத்திற்குள் சூரிய ஒளிகளால் ஊடுருவ முடியாது. இதனால் இப்பகுதியை ‘midnight zone’ என்று அழைக்கின்றனர். […]