மொஸ்கோவில் இருந்து தப்பியோடிய புடின்
ரஷ்யாவில் உள்நாட்டு போர் தலைதூக்கியுள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து விமானம் மூலம் தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக பயன்படுத்தும் விமானங்களில் ஒன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு மொஸ்கோவில் இருந்து புறப்பட்டதாக ஃப்ளைட் ரேடார் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அரை மணி நேரத்திற்குள், புட்டினின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்கூவரில் வீட்டில் கிடந்த சடலம்
வான்கூவரில் உள்ள ஒரு வீதியில் அமைந்துள்ள வீட்டில் சடலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற நபர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த மரணத்தை கொலை வழக்காக பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இது இந்தாண்டில் வான்கூவரில் நடந்த ஒன்பதாவது கொலையாகும். சில தினங்களுக்கு முன்னர் ரென்ப்ரூ வீதியில் இரவு 10 மணிக்கு நபர் ஒருவர் நடந்து சென்ற போது வீடு ஒன்றில் சடலம் கிடப்பதை பார்த்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கும் நிலையில் ஏதேனும் தகவல் தெரிந்தால் […]
வாக்னர் படைகளுக்கும் புடினுக்கும் இடையே இணக்கம்
வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்னர் அமைப்பு ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது. 50 சதவீதம் ராணுவ வீரர்கள் தங்களுடன் ஆதரவாக இருப்பதாகவும், மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்தது. ஏற்கனவே உக்ரைன்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், உள்நாட்டில் ஆயுத கிளர்ச்சி […]
சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பது எமது முதன்மை நோக்கம்
அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் ஊடாக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுவரெலிய மாவட்டத்தில் 7758 பேர் உள்ளடங்கிய 2288 வீடுகளுக்கு 1021 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ்வேளை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. […]
சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்
(க.கிஷாந்தன்) பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். திடீரென பொகவந்தலாவ நகரில் களமிறங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார். கைது செய்யப்பட்ட இளைஞர் தரப்பில் உள்ள நியாயத்தை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த ஜீவன் தொண்டமான், […]
சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற நாடுகள்
மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் போட்டியை நடத்தும் சிம்பாபே ஆகிய அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்கான தகுதிச் சுற்று சிம்பாபேயில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 02 பிரிவுகளின் கீழ் 10 அணிகள் களமிறங்கியுள்ளதுடன், போட்டி கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய அதிகாரம் இல்லை
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே தலைமை நீதிபதி இதனை அறிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. 1974-இல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த […]
“இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி – கமலா ஹாரிஸ்
அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதியும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:- “இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன. இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை […]
பொருளாதார மீட்சிக்கு UN ஒத்துழைப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐ.நா பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார். நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள […]
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் மோடி
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டு சென்றார். அங்கு அவர் எகிப்து நாட்டின் பிரதமர் அப்தெல் பதாவை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பிரதமராக பதவி ஏற்ற […]