ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அனைவரும் ‘துரோகிகள்’-புடின்

ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அனைவரும் ‘துரோகிகள்’ என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மேலும், எஸ்டோனியா தனது எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், அண்டை நாடான ரஷ்யாவின் எந்தப் பகுதிக்கும் மக்கள் பயணிக்க வேண்டாம் எனவும் எஸ்டோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு துரோகத்தை எதிர்கொள்கிறது என்றும் இதற்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவத்திற்கு உரிய அனைத்து உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாக்னர் […]

மக்கள் வாழ்வதற்கு மிகவும் நகரங்களின் பட்டியல் கனடா

வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரங்களின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மூன்று கனடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரமாக ஒஸ்திரியாவின் வியன்னாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் பத்து நகரங்கள் வரிசையில் கனடாவின் மூன்று நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வான்கூவார், கல்கரி மற்றும் றொரன்றோ ஆகிய நகரங்கள் இவ்வாறு முறையே 5ம், 7ம் […]

மீண்டும் கூட்டெழுத்து கற்பித்தல்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கூட்டெழுத்து கற்பித்தல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் கூட்டெழுத்து எழுதுவது தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலை பாடத் திட்டத்தில் கூட்டெழுத்து எழுதுவதற்கு கற்பிக்கப்பட உள்ளது. கூட்டெழுத்து எழுதுதல் மாணவர்களின் கையெழுத்து போடுவதற்கான பயிற்சி மட்டுமல்ல என கல்வி அமைச்சர் ஸ்டீவன் லீஸ் தெரிவித்துள்ளார். கூட்டெழுத்து பயிற்சியானது இளையர்களின் பல்வேறு ஆற்றல் திறன்களை விருத்தி செய்யக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த தலைமுறையினர் ஆற்றல் மிக்கவர்களாக […]

தன்னால் பட்டம் பெற முடியவில்லையே – என்ற வருத்தத்தில் தற்கொலை

தங்கள் ஒரே மகனை கனடாவுக்கு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைத்த பெற்றோருக்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Anand என்ற இடத்தைச் சேர்ந்த விஷய் பட்டேல் என்னும் இளைஞனை கனடாவில் கல்வி கற்பதற்காக அவனுடைய பெற்றோர் அனுப்பிவைத்துள்ளார்கள். மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்து, பட்டம் பெறவேண்டிய நேரத்தில், தற்கொலை செய்துகொண்டுள்ளார் விஷய் பட்டேல். கடந்த வெள்ளிக்கிழமையன்று, அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி காரில் வெளியே சென்ற விஷய் பட்டேல் […]

மோதல்களுக்கு மத்தியில் புடின் எச்சரிக்கை

ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராட்டங்களை நடத்தும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய வாக்னர் கூலிப்படையின் தலைவர் அந்நாட்டு இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை அறிவித்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் தாக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – ரஷ்ய தூதுவர்

சர்வதேச சமூகத்தில் எழும் சில சிக்கலான சூழ்நிலைகளில் இலங்கை மேற்கொண்ட மத்தியஸ்த நடைமுறையை ரஷ்ய அரசாங்கம்  பாராட்டுவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தூதுவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் மேற்குலக நாடுகளின் தாக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க முயற்சி?

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஸ்தோவ்-ஆன்-டான் நகரை வாக்னர் கூலிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவில் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ரஷ்யாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தலைநகர் மாஸ்கோவில் ராணுவ டிரக்குகள் அணிவகுத்து நின்றன.அத்துடன் அந்நாட்டின் இணையதள வசதிகளும் ரத்து செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இப்போது வாக்னரின் இராணுவம் ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்குள் நுழைந்துள்ளது மற்றும் அங்கு அமைந்துள்ள தெற்கு […]

டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாக உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும் அங்குள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கழிவுகளை அகற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்ரம […]

அலட்சியத்தால் மூன்று உயிர்கள் பலி

03 பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். ரிதிமாலியர்த, தம்பகல்ல மற்றும் மிரியான பகுதிகளிலேயே மேற்படி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் பற்றிய தகவல்

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளமையினால் குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டமிடல்களை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நடவடிக்க எடுத்துள்ளார் என  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். அதன் கீழ் எட்டு விசேட் திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க 2000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தம் சீனாவுடன் கைசாத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த […]