“எண்ணங்களில் வண்ணங்கள்” நூல் வெளியீடு
ராமு தனராஜா அரச கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா பசறை நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணம் எனும் நூலை ஊவா தமிழ் இலக்கிய பேரவை வெளியிட்டு வைத்தது. குறித்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் மற்றும் வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் […]
மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவ சங்கத்தின் உத்தியோகபூர்வ முகநூல்!
மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஊடகப்பிரிவினரால் படசாலையின் பழைய மாணவர் சங்கத்துக்கான தனியான முகநூல் பக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (25.08.2023) மாலை இஷாத்தொழுகையின் பின் 08.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ.ஜே.மர்ஸுக் (SLEAS) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான எம்.சுபைர் கலந்து கொண்டு முகநூல் பக்கத்தினைத் தொடங்கி வைத்தார். ஊடகக்குழுப்பொறுப்பாளர் ஏ.எம்.எம்.மபாழில் ஆசிரியரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற […]
பாலர் பாடசாலை மாணவர்களின் சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட நிகழ்வுகள்
நூருல் ஹுதா உமர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பாலர் பாடசாலை மட்டங்களில் சுகாதார மேம்பாட்டினை விஸ்தரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.. பணிமனையின் சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம் பைரூஸ் அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் […]
பண்டாரவளை விடுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சந்தேக நபர் கைது.
ராமு தனராஜா பண்டாரவளை விடுதி ஒன்றில் 40 வயதுடைய எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரை பண்டாரவளை விடுதி ஒன்றுக்கு வரவழைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி […]
தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு – 2023
நூருல் ஹுதா உமர். மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனம் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் முழுநாள் தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு சம்மாந்துறை அல் – மர்ஜான் தேசிய பாடசாலை எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-மர்ஜான் வித்தியாலய அதிபர் எச்.எம். அன்வர் அலி, மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம், […]
பறை இசை ஒலிக்க கோலாகலமாக ஆரம்பமான கனேடிய தமிழர் தெருவிழா!
படங்கள் கிருபா பிள்ளை கனடா தமிழ் மக்களால் கொண்டாடப்படும் தமிழர்களின் திருவிழாவான ” தமிழர் தெரு விழா” இன்று டொரோண்டோ மார்க்கத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தச்ஙகரி உட்பட ஏராளமான பிரபலங்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கோண்டனர் . கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆலோசகர் சிவன் இளங்கோ தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பறை இசை பரத நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். இன்று இரவு இசை நிகழ்ச்சிகள் […]
மர்ஹூம் MIM.IQBAL ஞாபகர்த்த கிண்55ணத்தை வென்ற “YSSC” அணி!
கல்முனை சன்னி மொளன்ட் விளையாட்டுக்கழகம் நடாத்திய மர்ஹூம் MIM.IQBAL ஞாபகார்த்த கிண்ணம்-2023 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று இடம்பெற்றது. இப்போட்டியில் YSSC அணியினர் கல்முனை Sunny Mount SC அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் சம்பியன் கிண்ணம் 50000/- பணப்பரிசு மற்றும் 100000/- Abdullah Mens நிறுவனத்தின் Gift Voucher னையும் பெற்றுக்கொண்டனர்.. இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த Shakeel தலைமையிலான YSSC உதைபந்தாட்ட அணி […]
இந்தியவம்சாவளி இலங்கை தமிழர்களின் ஒன்றுகூடல்! ஸ்காபுரோவில் சிறப்பாக நடந்தது!
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களின் ஒன்று கூடல் ஸ்காபுரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் இடம்பெற்றது கனடாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் இந்தய வம்சாவளி இலங்கை தமிழர்கள் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டதாக கனடா இந்தியவம்சாவளி இலங்கைதமிழர் பேரவையின் தலைவர் தலைவர் சிதம்பரம் கிருஸ்ரணராஜ் கூறினார்.
பாசிக்குடாவில் பாரிய தீ விபத்து : கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு படையினர்
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், பாரியளவில் தீப்பரவல் காணப்படுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
அமெரிக்க தூதுவர் மன்னாருக்கு விஜயம். புனித ஸ்தலங்களை தரிசித்ததுடன் மதத்தலைவர்களுடன் விசேட பேச்சு
( வாஸ் கூஞ்ஞ) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மன்னாருக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை (25,26) ஆகிய இரு தினங்கள் விஜயத்தை மேற்கொண்டு மன்னார் மாவட்டத்தில் பழமை வாய்ந்ததும் உலகம் போற்றும் புனித ஸ்தலங்களாக விளங்கும் புதுமைமிக்க மருதமடு அன்னையின் ஆலயத்துக்கும் , பாடல் தளமாக விளங்கும் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கும் விஜயத்தை மேற்கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையும் சந்தித்துள்ளார். மன்னார் ஆயருடன் நல்லதொரு கலந்துரையாடலில் தான் ஈடுபட்டதாகவும் , […]