கஜேந்திர குமார் MP இல்லத்தை இரண்டாவது தினமாக முற்றுகை!

  பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்” என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆர்ப்பாட்டம் காரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதேவேளை, […]

மீலாத் விழா மூலம் மன்னார்  மக்களின் ஒற்றுமை மேலும் பலம்பெற வேண்டும். ! காதர் மஸ்தான்

(வாஸ் கூஞ்ஞ) 26.08.2023 மன்னார் மாவட்டத்தில் சகல இனங்களுக்கிடையேயும் ஒற்றுமை நிலவி வருகின்றது. இது மேலும் பலம் பொருந்தியதாக அமைய வேண்டும் என்ற நோக்கிலேயே சகல இன மக்களும் இதில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக மன்னாரில் முதன்முதலாக தேசிய மீலாத் நபி விழாவை நடாத்துகின்றோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார். புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க […]

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மறைவுக்கு கடையடைத்து, வெள்ளைக்கொடி பறப்பு! துக்கம் அனுஷ்டிப்பு!

  பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதிகளில் நண்பகல் முதல் அங்குள்ள பொது நிறுவனங்கள், கடைகள் முற்றாக மூடப்பட்டு வெள்ளக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மறைவு எமது பிராந்தியத்திற்கு பாரிய இழப்பாகுமென சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தலைவர் எம்.எம்.முபாரக் தெரிவித்துள்ளார். இன்று (26) அதிகாலை மரணமடைந்த அவர் மரணிக்கும் போது 71 வயதாகும். முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களின் ஜனாஸா தற்போது […]

சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தணிக்க காத்தான்குடியில் தாகசாந்தி

  (அஸ்ஹர் இப்றாஹிம் ) கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலையால் பொதுமக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் தரும் வகையில் காத்தான்குடியைச்சேர்ந்த தனியார் நிறுவனமொன்று தன்னார்வாக முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் வழிப்போக்கர்கள், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், வாடிக்கையாளர்களுக்கு தாகசாந்தி வழங்கியமை அனைவரினதம் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தாகசாந்தி குளிர்பானத்தினை இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் அருந்தி மகிழ்ந்தனர்.  

மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழா ஆலோசனைக் கூட்டம்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழாவை முன்னிட்டு எவ்வாறு இவ்விழாவை நேர்த்தியான முறையில் நடத்துவது சம்பந்தமாக புத்தசாசன சமய விவரங்கள் மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு மன்னார் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (26) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லீம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள […]

மயோன் முஸ்தபா மறைவு

(ஏ.எல்.எம்.சலீம்) கிழக்கிலங்கையின் சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் வாதியும் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சருமான மயோன் முஸ்தபா இன்று (26) கொழும்பில் காலமானார். கிழக்கிலங்கையின் கல்முனை – சாய்ந்தமருதைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா கொழும்பு கிருளப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதுடன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கொழும்பில் நடைபெறவும் ஏற்பாடாகியுள்ளது. அன்னாரின் மறைவு தொடர்பாக இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். திகாமடுல்ல மாவட்ட […]

சந்திரயான் திட்டத்தை கேலி செய்த சீனா

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர், கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்டு இன்றும் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள நவீன கேமரா எடுத்து அனுப்பிய இந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டு இருந்தது. இதுவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நிலவின் மேற்பரப்பில் ரோவரின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், அது 8 மீட்டர் அளவுக்கு நகர்ந்திருப்பததாக கூறியுள்ளனர். மிகக்குறைந்த செலவில் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் […]

கனடாவில் 7 முறை கத்தியால் குத்தப்பட்ட இந்தியர்

கனடாவில் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற இந்தியர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட விடயம், அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ ஏரியாவில் வாழ்ந்துவந்த தனது மகன் குடும்பத்தைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளார் திலீப் குமார் ( Dilip Kumar Dholani, 66). அஹமதாபாதைச் சேர்ந்த திலீப் குமார், தன் மகனுடைய குழந்தையான தனது ஒன்றரை வயது பேத்தியுடன் வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி கடந்த […]

ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நகரின் மேற்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயிற்றுப் பகுதியிலும், காலிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சம்பவத்தில் காயமடைந்த ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் அதனை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. […]

பிரான்ஸ் தூதர் சில்வெயின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

நைஜரில் கடந்த மாதம் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி புதிய அதிபராக பதவியேற்றார். ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது. இதற்கு […]