ஆகஸ்டு 23 தேசிய விண்வெளி தினம் – பிரதமர் மோடி

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பியதும் நேராக இஸ்ரோ […]

மடகாஸ்கரில் விளையாட்டு விழா நெரிசலில் 13 பேர் பலி

மடகாஸ்கரில் விளையாட்டு விழாவின் தொடக்கத்தில் ஏற்பட்ட நெரிசலில் 13 பேர் இறந்ததாகவும் 108 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் அன்டனானரிவோவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஏறக்குறைய 50,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தியப் பெருங்கடல் தீவுகள் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர்

அவுஸ்திரேலியாவில் சுறாமீன் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் கடற்கரைக்கு அருகில் உலாவலில் ஈடுபட்டிருந்த 44 வயது நபர் சுறாவால் தாக்கப்பட்டுள்ளார். நபர் சுமார் 30 வினாடிகள் சுறா மீனிடம் இருந்து தப்பிக்க போராடியதாகவும், காயங்கள் காரணமாக அவர் சிரமத்துடன் கரைக்கு நீந்தியதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில […]

அமெரிக்காவில் தாயை காப்பாற்றிய மகள் உயிரிழந்த சம்பவம் …

தாயின் இரண்டாவது கணவரிடம் இருந்து தாயை காபாற்றிவிட்டு 21 வயது மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான் எனும் யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 21 வயதான ஏஞ்சலினா டிரான், தனது தாயுடனும் தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார். கியெப், கடந்த வருடம் வரை […]

முன்னாள் சீஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட 4 பேர் வழக்கிலிருந்து விடுதலை!

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸீஸ் நிசாரூடீன்  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர்களான சுகத் மெண்டிஸ் மற்றும் நிஷாந்த சில்வா ஆகியோர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் போது விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலைக்கு கொழும்பு குற்றப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஷானி அபேசேகர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி முன்வைத்த வாதங்களின் பிரகாரம் சந்தேகநபர்கள் நால்வரையும் குற்றமற்றவர்கள் என […]

மதுரை ரயிலில் பெரும் தீ விபத்து – 8 பேர் பலி 20 பேர் காயம் 

    மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். ரயிலின் ஒரு பெட்டியல் ஏற்பட்ட தீ தொடர்ந்து மற்ற பெட்டியிலும் பரவியதாக சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17-ம் தேதி தமிழகம் வந்துள்ளனர். ரயிலில் தீ […]

“இலங்கையில் இரண்டாம் மொழி ஏற்படுத்திய இன நல்லிணக்கம்*

ரிப்பாஸ்  இன நல்லிணக்கமானது அண்மைக் காலமாக உலக நாடுகளிடையேயும் இலங்கை நாட்டிற்குள் வாழும் மக்களிடையே பேசப்பட்டு வரும் வர்த்தையாக இன நல்லிணக்கம் காணப்படுகின்றது குறிப்பாக இலங்கை போன்ற பல்லினம் வாழும் பல மொழி பேசும் நாட்டில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது அதற்கான காரணம் இனங்களுக்கிடையில் நீண்ட காலமாக சுமார் 30 வருடகாலமாக யுத்தத்தினால் முரண்பாடு காணப்பட்டது அந்த வகையில் யுத்த நிறைவடைந்த பின்னர் மக்களிடையே புரிந்துணர்வு சக வாழ்வு சமத்துவம் சமாதானம் போன்ற எண்ணக்கரு தோற்றம் பெறுவதையும் […]

” டாம் வீதி” மலசல கூட சர்ச்சை குறித்து முறையிட்ட ராஜூ பாஸ்கரன்! அன்னை ப்ர்தாவின் வேண்டுகோளின் எதிரொலி

கொழும்பு டாம் வீதியிலுள்ள பொது மலசல கூடத்தின் பெண்கள் பிரிவில் ஆண்களை அனுமதிக்கும் செயலை புறக்கோட்டையில் தேசிய பத்திரிகைகளை விநியோகிக்கும் அன்னை ப்ரிதா நேற்றைய தினம் கருத்து வெளியிட்டு இருந்தார்…!!!  சிரேஷ்ட ஊடகவியலாளரான அஷ்ரப் ஏ ஷமிட் அவர்கள் பாதிக்கப்பட்ட அன்னையை சந்தித்து பேட்டியொன்றை எடுத்தார். அதில் தாய் மலசல கூடத்தில் தாம் பட்ட அவமானத்தை வேதனையோடு சொன்னார். குறிப்பாக பொது மலசல கூடத்தை நிர்வாகிக்கும் பெண் அங்கு வரும் ஆண்களை பெண்கள் பகுதக்கு செல்ல அனுமதிப்பதால் […]

நீர் தொட்டியில் வீழ்ந்த இரண்டு வயது குழந்தை மரணம்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில நேற்று (26.08.2023) மாலை வீட்டுமுற்றத்தில் குறித்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாதநிலையில் பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே மரணமடைந்ததாக […]

கனடா – இந்திய பூர்வீக இலங்கை தமிழ் பேரவையின் ஒன்று கூடல் டொரோண்டோவில் நாளை !!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடா நாட்டில் பல்வேறு மாகணங்களில் பிரிந்து வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒன்று கூடல் நாளை ஸ்காபுரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் இடம்பெறுகிறது.   இந்த நிகழ்வில் ஒன்று கூடலுடன் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன் சார் தேவைகள் குறித்தும் விசேடமாக மாணவர்களின் கல்விக்கு எவ்வாறான செயற்திட்டங்களை மேற்கொள்வது என்பது குறித்து எம் மக்களோடு கலந்துரையாட இருப்பதாக பேரவையின் தலைவர் தலைவர் சிதம்பரம் கிருஸ்ரணராஜ் கூறினார். நாளைய நிகழ்விற்கான ஏற்பாடுகள் […]