கனடாவில் ஆபரண கொள்ளையின் போது ஏற்பட்ட வினோத சம்பவம்
கனடாவில் ஆபரண கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பனவற்றை இழந்து வீதியில் ஓடிய வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அணுகி அவர்களது ஆபரணங்களை பலவந்தமாக அபகரித்துள்ளார். இதன் போது குறித்த இருவரும் கொள்ளையருடன் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தின் போது கொள்ளையர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பவற்றை இந்து […]
சரத்வீரசேகர MP யின் பேச்சை கண்டித்து வடமாகண சட்டத்தரணிகள் போராட்டம்!!
சட்டத்தரணி ப.நாகேந்திரன் பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிவானை அச்சுறுத்தி அவமதித்த சரத் வீரசேகரவின் அசிங்கமான நடத்தையை கண்டிக்கின்ற வகையில் சட்டத்தரணிகள் போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர். சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று 25/03/2023 காலை வட மாகாணத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அடையாள எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றஉறுப்பினர் சரத்வீரசேகர பாராளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் […]
கஜேந்திர குமார் பொன்னம்பலம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் !
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு வீட்டை சுற்றிவளைத்து சிலர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அன்மையில் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில கொழும்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்து இருந்தார . அதன் முதற்கட்டமாக இன்று பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திர குமார் போன்னம்பலத்தின் கொழும்பு வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு தற்போது அங்கு கூடி இருக்கின்றனர். மேலும் […]
கனடாவில் பாதையில் ஒன்றில் திடீரென ஏற்பட்ட குழி
கனடாவின் பிரதான வீதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட குழியினால் சாரதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கனடாவின் மிஸ்ஸசாக பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். கனடாவின் தென் மேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள பாதை ஒன்றில் ஏற்பட்ட குழி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதையில் பாரிய ட்ரக் வண்டி ஒன்றை செலுத்திச் சென்ற குறித்த சாரதி திடீரென குழியில் வாகனம் வீழ்ந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார். 59 வயதான சாரதி ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். […]
செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருடப்பூர்த்தி : பழைய மாணவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
(ஏறாவூர் சாதிக் அகமட்) மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருட பாடசாலை தினத்தையொட்டி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 23.08.2023ம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் தே.குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, ஏறாவூர் பொலிஸார் பொறுப்பதிகாரி, செங்கலடி […]
மட்டக்களப்பில் முன்னுதாரனமாக செயற்பட்ட இந்து ஆலயங்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்று (24) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த கால சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததனால் பரவலாக பின்தங்கிய பகுதிகளில் கைவிடப்பட்டும் கவனிப்பாரற்று அழிவுற்ற நிலையிலும் பல சிறிய ஆலயங்கள் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றின் தொன்மைகள் அழிந்து போகா வண்ணம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வழிபாட்டிற்குரிய […]
குர்பாஸின் 151 ஓட்டங்கள் ஆப்கான்ஸ்தான் அணியை காப்பாற்றவில்லை! தொடரை வென்றது பாகிஸ்தான் அணி !!
பாகிஸ்தான் ஆப்கான்ஸ்தான் அணிகளுகிடையில் இலங்கையில் நடைப்பெறும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1 விக்கெட்டினால் த்ரிலர் வெற்றியை பெற்றது. இதன்படி 2- 0 என்ற கணக்கில் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 227 ஓட்டங்களை பெற்றது. இப்ராஹும் சத்ரான் 80 ஓட்டங்கள் பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி அதிக ஓட்டங்களை […]
” கடைசி விவசாயிக்கு”தேசிய விருது! அதில் நடித்த நல்லாண்டி ஐயாவிற்கு சிறப்பு விருது
சிறந்த தமிழ்ப்படமாக, ‘கடைசி விவசாயி’ தேர்வு திரைப்படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 69-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது, மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்துக்கு அறிவிக்கப்பட்டதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இருக்கிறார். மேலும் சிறந்த மலையாளம் திரைப்படம் – Home சிறந்த கன்னடம் திரைப்படம் – 777 Charlie, சிறந்த தெலுங்கு திரைப்படம் – Uppena தெரிவானது. அத்துடன் சிறந்த நடிகருக்கான தேசிய […]
வவுனியா இரட்டை கொலை! சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்ல தடை, வங்கி கணக்கு பரிசோதனை!
வவுனியா, இரட்டை கொலை சந்தேக நபர்கள் மற்றும் தேடப்படும் நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவுக்கு (சிஐடி) அனுமதி வழங்கியதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச் சீட்டுக்களையும் முடக்க வவுனியா நீதிமன்றம் இன்று (24.08) உத்தரவிட்டது வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இரண்டைக் கொலை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய […]
வடக்குகிழக்கில் இருந்து கொழும்பு செல்லும் சொகுசு பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை! அங்கஜன்
வடக்கு கிழக்கிலிருந்து கொழும்பு வரை பயணம் செய்யும் தனியார் பேரூந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் அனுமதி பத்திரமின்றி பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 26.05.2023 அன்று இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரேரணை முன்வைத்திருந்தார். அதற்குரிய பதிலறிக்கை இன்று (24.08.2023) இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய போக்குவரத்து […]