யாழ் சொகுசு பஸ் தீ பிடித்த காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24-08-2023) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.புதன்கிழமை (23-08-2023) இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. இதற்கமைய இன்று (24.08.2023) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ […]
பிரிந்த வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையாய் வாழ்வதே சிறப்பு! அப்துல் மஜித்
(ஏ.எல்.எம்.சலீம்) இரண்டு மாகாணங்களை இணைக்க நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு தேவையில்லை, சாதாரண பெரும்பான்மை போதும் என்பது 25 வருடங்களாக நாடாளுமன்ற எம்பியாக இருக்கும் ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதா என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கை இணைக்க மூன்றில் இரண்டு தேவை என்பதால் அது பற்றி முஸ்லிம் சமூகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் […]
செஸ் உலக கிண்ணம் கார்ல்சனிடம் ! மக்களின் மனங்களோ பிரக்ஞானந்தாவிடம்!
செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். டை-பிரேக்கர் சுற்றில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினார் பிரக்ஞானந்தா ஆயினும் அவரது திறமையை பாராட்ட வேண்டும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களுக்கும் மிக முக்கியமா இந்திய இளம் வீரர் அவர்களுக்கும் எமது #வாழ்த்துக்கள்!! இந்த போட்டி குறித்து கருத்து வெளியிட்ட பிரக்ஞானந்தா Look at the confidence of Pragg. 👏🇮🇳With this self […]
தலைமன்னாரில் ஜீப் தடம் புரண்டு விபத்து!
(வாஸ் கூஞ்ஞ)மாடு வீதியின் குறுக்கே பாய்ந்ததால் வாகனம் தடம் புரண்டதில் வாகனத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டபோதும் சாரதி பயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது தலைமன்னார் மன்னார் வீதியில் பேசாலையிலிருந்து மன்னார் நோக்கி மகேந்திரா என்ற இனம் கொண்ட வாகனம் பயணித்துக் கொண்டிருந்தபொழுது தாராபுரம் என்ற இடத்தில் இவ்வீதியின் குறுக்கே மாடுகள் பாய்ந்தபோது இவற்றிலிருந்து மீள்வதற்கு வாகனத்தை திருப்பியதும் வாகனம் […]
மடுல்சிமையில் அநாதவரான நிலையில் சடலம் மீட்பு!
இன்று (24) பிற்பகல் மடுல்சிமை விராலிப்பத்தன பகுதியில் நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 55 வயதான தங்கவேலு ராசையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் இவர் விராலிப்பத்தன மடூல்சிமை என்ற இடத்தில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது விராலிப்பத்தன விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு அருகில் நபர் ஒருவர் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் இதுவரை […]
நேபாள சாலை விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களின் உடல் சொந்த ஊருக்கு
நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பஸ், இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பஸ்சில் இருந்தனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை […]
ஒன்றாரியோ அரசாங்கத்தின் பசுமை பகுதி வீடமைப்பு திட்டம் தொடர்பில் விசாரணை
முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஒன்றாரியோ அரசாங்கத்தின் பசுமை பகுதி வீடமைப்பு திட்டம் தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த வீடமைப்பு திட்டத்தின் போது ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண வீடமைப்பு அமைச்சின் பிரதம அதிகாரி ரயன் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பாக வீடமைப்பு திட்டத்திற்கான கட்டுமான நிறுவனங்களை தெரிவு செய்யும் போது […]
கனடாவில் தமிழர் தெருவிழா
எதிர்வரும் 26ம் திகதி மற்றும் 27ம் திகதிகளில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் பேரணியும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்ற உள்ளனர். தமிழ் மொழிக்கும், தமிழ் மரபுரிமைகளுக்கும் பங்களிப்பு வழங்கியவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இந்த ஆண்டும் இந்த வீதித்திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் 237 இடங்களில் காட்டுத் தீ
கனடா மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக பலர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியே தீர்மானித்துள்ளனர். அங்குஸ் ரீட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. காட்டுத் தீயினால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்கும் வகையில் இவ்வாறு புதிய இருப்பிடங்கள் நோக்கி நகர மக்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கனடாவில் நிலவி வரும் காட்டுத் தீ […]
நம்பமுடியாத சாதனை சந்திரயான் 3 -கமலா ஹாரிஸ்
நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலா துணை ஜனாதிபதி ஹாரிஸ் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும் என்றும் விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.