அடம்பனில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் இருவரும் விவசாயிகள்!
( வாஸ் கூஞ்ஞ) மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் வேளாண்மைக்கு நீர் பாச்சிவிட்டு வீடு திரும்பிய இரு விவசாயிகளின் மீது துவக்குச் சூடு. நடத்தப்பட்டதில் இருவரும் ஷ்;தலத்திலேயே மரணித்துள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (24) காலை ஒன்பது மணிக்குப் பிற்பாடே அடம்பன் முள்ளிக்கண்டல் குளக்கட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் குளக்கட்டில் ஒரு மோட்டர் சைக்கிள் விழுந்து கிடப்பதையும் மோட்டர் சைக்கிளுக்கு அருகில் இருவர் கிடப்பதையும் இக்குளக்கட்டுக்கு அருகாமையிலுள்ள பிரதான […]
மட்டு.கருவேப்பங்கேணி தமிழரசுக்கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்!
சஷி புண்ணியமூர்த்தி இலங்கை தமிழரசுக்கட்சியின் கருவேப்பங்கேணி வட்டரக்கிளையின் தலைவர் தனுச பிரதீப் மீது நேற்றிரவு சுமார் 9.20 மணியளவில் கொலைவெறித்தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. தனது வீட்டிலிருந்து உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச்சென்று கொண்டிருந்த வேளை, கூழாவடிச் சந்தியிலுள்ள டிஸ்கோ விளையாட்டு மைதானம் அருகே இனந்தெரியாத நபர்களால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று காலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்பட்டு, அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]
மன்னார் அடம்பனில் துப்பாக்கிசூடு இருவர் பலி!
அஸ்ரப் அலீ மன்னார் – அடம்பன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மன்னார் – அடம்பன் – முல்லிகந்தல் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 46 மற்றும் 53 வயதுடைய பள்ளிமடு, உளியன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கொலையாளிகள், மற்றும் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் […]
ரிதிதென்னை இக்ரஹ் வித்தியாலய ஆசிரியரைப் பலி கொண்ட விபத்து : சாரதி கைது
எஸ்.எம்.எம்.முர்ஷித். மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணை எனும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரிருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ரிதிதென்னை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற தனியார் சொகுசு பஸ் வண்டியும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப்பாட ஆசிரியரான […]
சந்திராயன் ராக்கெட்டுக்கே 263 மில்லியன் செலவினம்! சிச்சிக்கு இலங்கை செலவிட்டதோ 320 மில்லியன்! கணக்கை சமர்ப்பியுங்கள் சபையில் சஜித் !
இந்தியா 2008,2019 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் முறையே சந்திரயான் 1, 2 மற்றும் 3 என மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக எப்படியோ நிலவை அடைந்ததனர் என்றும், எனினும்,இந்த 3 செயல்முறைகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டு நமது நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சாட் 1 செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் […]
மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு 45000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி
( வாஸ் கூஞ்ஞ) மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளாக ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் தலா 45000 ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மெசிடோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் தமது வாழ்வாதார தொழிலாக சலவை மற்றும் சலவைத் தூள் சவர்க்காரம் மற்றும் தொற்றுநீக்கி போன்ற 06 உற்பத்தி பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சினை சிறப்பாக பெற்ற பயிற்சியாளர்களுக்கு மெசிடோ நிறுவனத்தின் தலைமையில் இலங்கை கைத்தொழில் அதிகார சபையின் சான்றிதழ் […]
மின் கம்பியில் மோதியது ரதம் – இருவர் பலி – மூவர் பாதிப்பு! நமுனுகலையில் சோகம்
ராமு தனராஜா பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் பவனி வந்துகொண்டிருந்த ரதம், மின் இணைப்பு கம்பியில் மோதியதால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம், இன்று காலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இவ் அனர்த்தத்தில் 27 மற்றும் 37 வயதுடைய உயிரிழந்துள்ளதாக பசறை வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரணித்த இருவரும் பூட்டாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என நமுனுகுல […]
தனது கவலையை கனடிய மக்களிடம் வெளிப்படுத்திய – மன்னார் சார்ள்ஸ்
கனடிய மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணம் மற்றும் வடமேற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ நிலைமைகள் குறித்து தனது மனைவி கமீலாவும் தானும் மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் மன்னார் சார்ள்ஸ் தனது கவலையை கனடிய மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கோடை காலத்தில் கனடிய மக்கள் பல்வேறு நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார். பாரிய காட்டுத் தீ […]
சென்னை திரும்பிய அஜித் : “விடாமுயற்சி” படப்பிடிப்பு அக்டோபர் முதல்
ஐரோப்பிய நாடுகளில் தனது பைக் டூர் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித. தற்போது இலங்கை விஜயம் செய்திருக்கும் லைக்கா குழும நிறுவனர் அ.சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ” விடாமுயற்சி ” படத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்பட வேளைகள் மே மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கதையில் ஏற்பட்ட மாற்றங்கள், லைக்கா நிறுவன மீதான அமுலாக்க பிரிவு சோதனை இதனால் படத்தின் ஆரம்ப பணிகள் தாமதமானது. இதனால் […]
ரஷ்யாவில் விமான விபத்து, வாக்னர் கூலிப்படைத் தலைவர் உயிரிழப்பு?
அஸ்ரப் அலீ ரஷ்யாவில் இன்று மாலை இடம்பெற்ற விமான விபத்தில் வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜினி பிரிகோசின் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த சிறிய ரக தனியார் விமானம் ஒன்றே டீவர் பிராந்தியத்தின் (Tver Region) குசென்கினோ கிராமம் ( Kuzhenkino) அருகே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது விமானத்தில் ஏழுபேர் பயணித்துள்ளனர். பயணிகள் பெயர்ப்பட்டியலில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் ப்ரிகோசின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. BREAKING: Private jet carrying […]