ஜமாலியா கிராம மக்களின் போராட்டம் பேச்சுவார்த்தையின் பின் முடிவு! ( Full Story)

அஸ்ரப் அலீ திருகோணமலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குகள் கொண்டுவரப்பட்டது திருகோணமலை, ஜமாலியா பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று மாலை அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர் இந்நிலையில் அப்பிரதேசத்துக்கு ராணுவத்தினரும் […]

வட மாகண சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்த அமெரிக்க தூதுவர்! தேசிய பிரச்சினை உட்பட பல விடயங்கள் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் வட மாகாணத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாடினார். இன்று ( 23/08/2023 நடைப்பெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய பிரச்சனை உள்நாட்டு அரசியல் நடப்பு நிலவரங்கள் குறித்தும் இதில்  கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்த கூட்டம் தொடர்பாக அதில் கலந்து கொண்ட சட்டத்தரணி ப.நாகேந்திரன் கருத்து தெரிவிக்கையில் மலையகம் மற்றும் அவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து எனது கருத்தினை தூதுவர் கேட்டறிந்தார் மலையகத்தைப் […]

பொலிஸ் காவலில் இளைஞர் மரணம்! ஜமாலியா கிராமத்தில் தீ மூட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்!

அஸ்ரப் அலீ திருகோணமலை, ஜமாலியா பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபா் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்துள்ளார் இதனையடுத்து ஜமாலியா பிரதேசவாசிகள் வீதியில் இறங்கி, பொலிசாருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர் இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் தற்போதைக்கு கடும் பதற்றம் நிலவுகின்றது பொலிசாரும், இராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பில் சற்று முன்னர் திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது .”மிக விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்த […]

போதைப்பொருள் கடத்தலை தடுங்கள்! பூரண ஆதரவு சஜித் அறிவிப்பு

போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு,9/11 ஆணைக்குழுவால் Department of Homeland Security என்ற புதிய பிரிவு நிறுவப்பட்டதாகவும்,30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாடாக தற்போது போதைப்பொருள் பயங்கரவாத கடத்தலுக்கு பலியாகியுள்ளதாகவும்,பாடசாலை கல்வித் துறையிலும் படையெடுத்துள்ளதாகவும்,ஆதிக்கம் செலுத்துவிட்டதாகவும்,எனவே, போதைப்பொருள் கடத்தலை அழிப்பது தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருக்க […]

பதுளை பசறை பிரதான வீதியில் இரு வேறு விபத்துகளில் ஐவர் காயம்!

  ராமு தனராஜா பதுளை பசறை பிரதான வீதியில் இரு வேறு விபத்துகளில் ஐவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.   இன்று மாலை பெய்த கடும் மழையின் போது பதுளை பசறை பிரதான வீதியில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்களில் ஐவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பசறை வீதி 5 ம் கட்டை பகுதியில் பேருந்து ஒன்றும் மகிழூந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மகிழூந்தில் பயணித்த […]

வெருகலில் குளவி கொட்டுக்கு இளம் குடும்பஸ்தர் மரணம்!

  வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் என்ற 30 வயதான இளம் குடும்பஸ்தரே குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்பில் பணிபுரிந்து வந்த இவர் விடுமுறையில் மாவடிச்சேனையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அயல்வீட்டாருக்கு பனை ஓலை வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறியுள்ளார். அவ்வேளை பனை மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து […]

சந்திரயான் 3 : நிலவின் தென்துருவத்தின் பக்கம் யாருமே சென்றதே இல்லை.! இந்தியாவிற்கே பெருமை

நிலவில் எட்ட முடியாத இலக்காக நீண்டகாலமாக இருந்து வரும் தென்துருவத்தில் இன்று சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறங்கி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் நிலவின் தென்துருவத்தை பார்த்து உலக நாடுகள் அஞ்சும் நடுங்கும் நிலையில் இந்தியா ரிஸ்க் எடுத்து சாதித்தது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் […]

நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகள் மேம்படுத்தப்படவுள்ளன

  நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம் – இந்திய உயர்ஸ்தானிகர் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த போது தெரிவிப்பு உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் […]

மிசோரமில் பால விபத்து வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி

மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது, 35-40 தொழிலாளர்கள் இருந்ததால், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, இடிந்து […]

நுவரெலியாவில் இலவச மூக்கு கண்ணாடி வழங்கல்

   (  நூரளை பி. எஸ். மணியம்) நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின்” ஏற்பாட்டில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ ஆலய பிரதான மண்டபத்தில் இன்று (23) புதன்கிழமை நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட  கண் பார்வை குறைந்த வரிய குடுபத்தை சேர்ந்த மக்களுக்க மூக்கு கண்ணாடிகள் இலவசமாக  வழங்கி வைக்கப்பட்டன. இவ் வைபவத்தின் போது” நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின்” தலைவி திருமதி ஸ்ரீ சிவராஜன் கருத்து தெரிவிக்கையில்’ நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் […]