நேபாளத்தில் – ஆற்றில் கவிழ்ந்த பஸ் 8 பேர் பலி
நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது பஸ் அருகேயுள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து […]
ஒன்றாரியோவில் பல மாதங்களாக கோவிட் தொற்று அதிகரிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பல மாதங்களாக தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்து சென்ற நிலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுகளிலும் இவ்வாறு பருவ மாற்றங்களின் போது கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஈஜி5 என்னும் ஒமிக்ரோன் திரிபு வகை ஒன்று அதிக அளவு பரவி வருவதாகவும் இது வீரியமான ஓர் கோவிட் திரிபு எனவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நோய் […]
“தோட்டத்தொழிலாளர்களின் உரிமையை தா ” ஹட்டனில் ஆரம்பமான கையெழுத்து வேட்டை
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஹட்டனில் நகரில் இன்று (23) ஆரம்பமானது. அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ” மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளன, எனினும், அவர்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் தொடர்பில் எந்தவொரு […]
கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டை
கனடாவில் எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர பதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. பெருந்தொகை அட்டைகள் இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் துறைமுக நுழைவாயில் இந்த இருவரையும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து 10,000 டாலர் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. […]
கனடா கனவுகளில் வாழும் சர்வதேச மாணவ மாணவியர்களுக்கு…….
கனடா கனவுகளில் வாழும் சர்வதேச மாணவ மாணவியர்கள் பலர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இந்திய மாணவர்கள் சுமார் 700 பேர் ஏஜண்ட் ஒருவரால் ஏமாற்றப்பட்ட விடயம் கனடா மற்றும் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஷிவானி (Shivani Sharma, 29), கனடாவில் உயர் கல்வி கற்று, நல்ல ஒரு வேலையில் அமர்ந்து, தன் கணவரையும் குழந்தையையும் கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் ஆசையில், கனேடிய கல்லூரி ஒன்றிற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விண்ணப்பித்தது Vancouver Community […]
ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் தடுப்பு ஊசி தட்டுபாடு! எதிர்கட்சி தலைவர் சபையில் கவலை!!
*நாட்டின் சுகாதாரத் துறைக்கு இறைவனே துணை நிற்க வேண்டும்.*எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுவதும், வெளிநாட்டில் படிக்கும் விசேட மருத்துவர்கள் நாடு திரும்புவதாக இல்லை என்றும்,புதிய வைத்தியர்கள் சுகாதார அமைச்சுடன் இணைந்து சேவையாற்ற மறுப்புப்பதும்,பட்டபின் படிப்பு கற்கைகளை மோற்கொள்ளாமை போன்ற காரணங்களால் விசேட வைத்தியர்கள் உட்பட வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும், […]
அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுதீயை எதிர்கொள்ளதயாராகவேண்டும் என எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2019 – 20 கறுப்புகோடை கால காட்டுதீயின் பின்னர் மிகவும் ஆபத்தான காட்டுதீயை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழமைக்கு மாறான வெப்பநிலைகாரணமாக அவுஸ்திரேலியாவின் பெருமளவு பகுதிகள் காட்டுதீயினால் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகின்றதாக அவுஸ்திரலேசிய தீ அதிகாரபேரவை தெரிவித்துள்ளது. குறைவடைந்துள்ள மழைவீழ்ச்சி காலநிலை மாற்றங்கள் போன்றவையும் இவற்றுக்கு காரணம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குயின்ஸ்லாந்து நியுசவுத்வேல்ஸ் […]
“நாட்டின் சுகாதார நெருக்கடி குறித்து ஜெனிவா செல்ல தயார்…டாக்டர் காவிந்த ஜயவர்தன MP
நாட்டின் தற்போதைய சுகாதார சீர்கேடு குறித்து “ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்” மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார ஆகியோர் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியகத்திற்குச் சென்றனர். இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹப்புத்தளை சுற்றுலா விடுதி துப்பாக்கி சூட்டில் உயிரழந்தவர் மாத்தறையை சேர்ந்தவர்! பொலிஸார் தீவிர விசாரணை
ராமு தனராஜா ஹப்புத்தளை பெரகல வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்தவர் விடுதி உரிமையாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு […]
ஹாலிஎலயில் பால் வேன் கவிழ்ந்தது! மூவர் ஆஸ்பத்திரியில்
ராமு தனராஜா ஹாலிஎல உனுகொல்ல வீதியில் இன்று (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎலயிலிருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே. இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்துப் பிரிவினரால் […]