நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! கண்டித்து போராட்டம்!!
நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் செய்து வருவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர் வேதாரண்யம் மீனவர்கள் ஏற்கனவே நேற்று மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தமிழக […]
மலையகத்தில் தொடரும் வறட்சி! நீர் நிலைகள் வறண்ட காட்சி! தேயிலை விளைச்சலில் வீழ்ச்சி!
நாட்டில் நிலவும் க டும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை பெறுவதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வறட்சியால் தேயிலை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது, கடும் சிரமத்துக்கு மத்தியிலேயே கொழுந்து கொய்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வறட்சியான காலநிலையால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்துள்ளது. அத்துடன், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் அமைக்கும்போது […]
சாணக்கியனுக்கு பிக்கு பலமான எச்சரிக்கை! கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை. பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்றைய தினம் சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்கு எனது பெயரை சொல்லி அங்கு சென்றவர்களுக்கும் பாரிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். என பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் பொலிஸ் சட்ட […]
“தென்றல்” சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்!
( ஏ.எல்.எம்.சலீம்) மட்டக்களப்பு கல்லடியிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் “தென்றல்” சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், 50 கலைஞர்கள் கௌரவிப்பும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. “தென்றல்” சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் […]
லிந்துல்லையில் ஐந்து பக்கம் கடிதமெழுதி உயிரை மாய்த்து கொண்ட இளந்தாய்!!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர், தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார். அவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (வயது – 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து பக்கததில் […]
அமைச்சர் டக்ளஸ் சீனா விஜயம்! இந்திய, சீனா அமைச்சர்களுடன் விசேட சந்திப்பு!
சீனாவில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த சந்தர்ப்பத்தினை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சார்பாக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தன்னுடைய சீன விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், குறித்த மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்தியா மற்றும் சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்த மாநாடு […]
“சிறந்த சமூக பணிக்காக” லைக்கா குழுமத்தலைவர் சுபாஸ்கரனை கௌரவித்த மகாசங்கத்தினர்
லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், இன்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது. சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் […]
மட்டக்களப்பு எல்லையில் இன முறுகல்! அமைச்சரின் அசண்டையீனம்! சாணக்கியன் ஆவேசம்!
இன்றைய தினம் காலை பாராளுமன்றத்தில் மகாவலி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ரோஷன் ரணசிங்கவிடம் காணிப் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கையினை முன்வைக்கும் போது நான் ஆணித்தரமாக முன்வைத்த விடையம் அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக இனங்களுக்கு இடையில் காணிகள் சம்பந்தமான குறிப்பாக மயிலத்தமடு – மாதவனை பகுதிகளில் இன முரண்பாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அறிவுறுத்தியிருந்தேன். அதே போல் இன்றிய தினம் அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிக்கப்படுள்ளார்கள்!! இதற்கான முழுப் […]
மலையக பெருந்தோட்ட மக்களுக்காக ஒன்று திரள்வோம். ஐக்கிய மலையக மா மன்றம் கோரிக்கை.
(நூரளை ரமணன்) மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்று திரள்வோம். ஐக்கிய மலையக மா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. மலையக இந்தியவம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்களில் குடியேரி 200 வருடங்கள் கடந்தும் தங்களுகென ஒரு முகவரி இல்லாமல் வாழும் சூழ்நிலையிலே இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.நாம் 200 வருடங்கள் கடந்து விட்டோம் என மார்பு தட்டிக்கொண்டு பல நிகழ்வுகள் நடத்துவதில் எமது மக்களுக்கு முகவரி கிடைத்து விடாது. அவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து […]
தடுத்து வைக்கப்ட்டுள்ள மதத்தலைவர்கள் ஊடகவியலாளர்களை விடுவிக்க கோரி மட்டுநகரில் ஆர்பாட்டம்!
மட்டக்களப்பு எல்லையில் தடுத்து வைக்கப்படுள்ள சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விடுவிக்குமாறு கோரியும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையில் கண்டித்தும் இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தன மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்றைய தினம் பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர். இதன்போது அவர்கள், மேய்ச்சல் தரை தொடர்பாக பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரில் அவதானித்ததுடன், பண்ணையாளர்களுடன் கலந்துரையாடல்களிலும் […]