மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு!
அஸ்ரப் அலீ மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரினால் இடையூறு செய்யபட்டுள்ளனர் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர். இதன் பிற்பாடு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அனைவரையும் வரும் வழியில் மறித்து […]
நாட்டு மக்களுக்கு நன்றி பாராட்டிய – கனடிய பிரதமர்
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, நாட்டு மக்களுக்கு நன்றி பாராட்டியுள்ளார். மக்கள் தமக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மனைவியை பிரிவது தொடர்பில் வெளியிட்ட அறிவித்தலைத் தொடர்ந்து தமக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவு தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனைவி கிரகரி ட்ரூடோவை பிரிவதாக அறிவிப்பு வெளியானது முதல் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு, ஆறுதல் வார்த்தைகள் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக தாம் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த […]
மத்திய துருக்கியில் பஸ் விபத்து 11 பயணிகள் பலி
மத்திய துருக்கி நகரமான யோஸ்காட் பகுதியில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. யோஸ்காட் பிரதான சாலையில் சிவாஸ் நகரில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையிலிருந்து விலகி சாலையோர பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. மத்திய துருக்கி நகரமான யோஸ்காட் பகுதியில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. யோஸ்காட் பிரதான சாலையில் சிவாஸ் நகரில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் […]
கெனிஸிங்டன் சந்தையில் துப்பாக்கிச் சூடு – போலீசார் விசாரணை
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெனிஸிங்டன் சந்தையில் கொலேஜ் ஸ்ட்ரீட் மற்றும் சப்ரினா அவென்யூ ஆகினவற்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சிலருக்கு இடையில் கைகலப்பு இடம் பெற்றதாகவும் அதன் போது நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் […]
ஒன்றாறியோவில் மக்களின் நடத்தைகள் தொடர்பில் கருத்துக்கணிப்பு
ஒன்றாறியோ மாகாணத்தின் இரண்டு நகரங்கள் மிகவும் முரட்டுத்தனமான நகராகவும் பவ்யமான நகராகவும் தெரிவாகியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இணைய வழியாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 44 நகரங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து இந்த கருத்துக்கணிப்புக்கான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நகரங்களில் மக்களின் நடத்தைகள் தொடர்பில் இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான மக்களைக் கொண்ட நகரங்களின் வரிசையில் முதல்நிலை பெற்றுக்கொண்ட நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் வோன் நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேவேளை, பவ்வியமான […]
பிரித்தானியாவில் 7 குழந்தைகளை கொன்ற நர்சு – நீதிமன்றம் விடுத்த அதிரடி தீர்ப்பு
பிரித்தானியாவில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக இறப்பு, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. பொலிஸார் நடத்திய விசாரணையில் அந்த மருத்துவமனையில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் உயிரிழப்பு அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றியது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்தது. பொலிஸார் […]
மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவ அண்ணபூரணி திருவிழா
( வாஸ் கூஞ்ஞே) மன்னார் மாவட்டத்தில் பாடல் தளமாக விளங்கும் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாகத் திகழும் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவின் ஆறாம் நாள் அண்ணபூரணி திருவிழா திங்கள் கிழமை (21) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் பொங்கல் பொங்கி அம்பிகைக்கான நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாக திருச்சி தேவா எனப்படும் நானாட்டான் பிரதேசத்தின் சங்கீத வித்துவானாகவும் இசைப் பேராசிரியராகவும் இருக்கும் மாசிலாமணி தேவபாலன் […]
மருதமுனை எலைட் கழகத்ற்கு கலந்விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!.
நூருல் ஹுதா உமர் மனாரியன் 88 அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மருதமுனை எலைட் விளையாட்டு கழகத்துடனான சினேகித பூர்வமான கலந்துரையாடல், பர்வின் ட்ரடிங் நிறுவனம் மற்றும் லதான் அக்ரோ இண்டர்நேசனல் நிறுவன பணிப்பாளர் அல் ஹாஜ் கலில் முஸ்தபா அவர்களுடன் மருதமுனை பிரதான வீதி அமைந்துள்ள முஸ்தபா கம்பளைஸ் நிறுவன காரியாலயத்தில் 2023.08.21 ஆம் திகதி திங்கள் மாலை இடம்பெற்றது. மேலும் எலைட் விளையாட்டு கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் […]
பேசாலை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டிகள்.
(வாஸ் கூஞ்ஞ) மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கின் கீழ் இயங்கும் சென்.மேரிஸ் , சென் விக்ரறீPஸ மற்றும் அமலதாசன் ஆகிய மூன்று முன்பள்ளி பாடசாலைகளின் மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள். சனிக்கிழமை (19) பேசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் கல்வி வலய உதவிப் பணிப்பாளர் ஞானராஐ; , பேசாலை மற்றும் கீழியன்குடியிருப்பு பங்குத் தந்தையர்களான அருட்பணியாளர்கள் ஏ.ஞானப்பிரகாசம் , லோறன்ஸ் அடிகளாhகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். (வாஸ் கூஞ்ஞ)
சாய்ந்தமருது பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஜனாஸா அடக்கும் முறை கருத்தரங்கு!!
நூருல் ஹுதா உமர். மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்கா மற்றும் YMMA – மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் 21. 08. 2023 அன்று சாய்ந்தமருது சைனிங் ஸ்டார் பெண்கள் அமைப்பின் காரியாலயத்தில் பெண்களுக்கான ஜனாஸா அடக்கும் முறை சம்பந்தமான செயன்முறை கருத்தரங்கு நடைபெற்றது. மனித மேம்பாட்டு அமைப்பின் கலாச்சார பிரிவின் தலைவர் எ.எம்.எ. அஸ்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக மாவடிப்பள்ளி YMMA யின் செயலாளர் ஏ. அஷ்ரப் (மௌலவி) கலந்து கொண்டு விரிவுரையாற்றினார். இந்நிகழ்வில் சாய்ந்தமருது […]