ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்த -உக்ரைன்
உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன. அந்தவகையிஒல் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முடிவதாக பிபிசி தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் விமானமொன்று சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது. டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஸ்யா இவற்றை பயன்படுத்தியுள்ளது. இதேவேளை ஆளில்லா விமானதாக்குதல் சனிக்கிழமை […]
கம்மன்பில்ல வரலாறு தெரியாது பேசுகிறார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP பதிலடி!
சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் அலீ கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் முதல் கட்டமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் உதய கம்மன் பில தெரிவித்திருந்தார். அத்துடன் தெற்கில் உள்ள சிங்கள மக்கள்தான் மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்த பொழுது… உதய கம்மன் பில போன்றவர்களது இனவாத கருத்துக்களால் எம்மை அச்சுறுத்தி […]
நிந்தவூர் உணவகங்களில் சுகாதார பிரிவினர் திடீர் சோதனை! புகார் இருப்பின் தொலை.இல 0672250834 அழையுங்கள்!!
நூருல் ஹுதா உமர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு உணவகங்களில் திடீர் சோதனை இடம்பெற்றது. தற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களின் தரத்தைப்பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் உணவகம்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார். மேலும், இதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நீரில் கழுவாமல் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் சீர்குலைந்து காணப்பட்ட […]
சிங்களவர்களின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டம்! வெள்ளியன்று கஜேந்திரகுமார் MP வீட்டின் முன்பாக திரளுங்கள்- கம்மன்பில
சிரேஷ்ட ஊடகவியலாளரான அஸ்ரப் அவீ கொழும்பிலுள்ள தமிழ் எம்.பி.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட வருமாறு சிங்கள பௌத்தர்களுக்கு உதய கம்மன்பில அழைத்துள்ளார் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற […]
தலைமன்னார் மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊர்மனையை சேர்ந்த நிசாந்தன் மரணம்!
( வாஸ் கூஞ்ஞ) தலைமன்னார் மன்னார் வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் திங்கள் கிழமை (21) பிற்பகல் மூன்று மணியளவில் மன்னார் தலைமன்னார் பிராதன வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவான பருத்திப்பண்ணையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து தொடர்பாக ஆரம்ப விசாரணையில் தெரியவருவதாவது. தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே […]
அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு பேரழிவு எச்சரிக்கை
அமெரிக்காவில் 84 ஆண்டுகளின் பின்னர் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி, அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரி சூறாவளி என பெயரிடப்பட்ட குறித்த புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், நேற்று மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து கரையை கடந்தது. மேலும், சூறாவளியால் மெக்சிகோவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக […]
சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!
சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று ( இடம்பெற்றது. சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதியினால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சுமூகமான கலந்துரையாடியதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு தொடர்புகளை பலப்படுத்திக்கொண்டு, முன்னோக்கிச் செல்வது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்ததோடு, உணவுப் […]
அநுராதபுரத்தில் விபத்து ! தாயும் 6 வயது மகளும் மரணம்!
அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இவ்விபத்தில் 36 வயதான சஷிகா துலானி வீரசிங்க மற்றும் அவரது 8 வயது மகளான திசானி பிரியன்ஷா ஆகியோரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் […]
மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2,400 வீடுகள் காலி
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கியதாகும். குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி, மளமளவென பரவ தொடங்கியுள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திடீர் தீ விபத்து காரணமாக அந்த பிரிட்டிஷ் கொலம்பியா முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 36,000 பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2,400 […]
கியூபெக்கில், கார் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல்
கனடாவின் கியூபெக்கில், கார் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்தக் காரிலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமையன்று, கனடாவின் கியூபெக்கிலுள்ள Wickham என்னுமிடத்தில், Robyn-Krystle O’Reilly (34) என்னும் இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர், Robyn-Krystleஇன் கணவர் என்றும், அவரது பெயர் Kevin Romagosa (39) என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர் தற்கொலைக்கு முயன்றதற்கான அடையாளங்கள் […]