ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!
கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் குறித்த குறைபாட்டினை கணிசமானளவு நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். கிழக்கிற்கான விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் விரைவில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான ஏற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக இன்று(21.08.2023) சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற […]
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ” பாடசாலை ஆராய்ச்சி வாரம்”
நூருல் ஹுதா உமர் ‘ஆராய்ச்சி வாரம் – 2023’ தொடர்பான கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ED/03/56/03/03 (II) இலக்க கடிதத்திற்கு அமைவாக ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுக்கும் கலாசாரம் ஒன்றை பாடசாலை முறைமைக்குள் உருவாக்குவதன் மூலமாக அறிவார்ந்த எதிர்காலமொன்றுக்கு நாட்டின் பாடசாலை சிறார்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளையின் ஊடாக வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் “பாடசாலை ஆராய்ச்சி வாரம்” செயற்றிட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்குரிய செயற்பாடுகள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி […]
நானுஓயாவில் கெப்ரக வாகனம் விபத்து – 6 பேருக்கு காயம்
( நூரளை பி.எஸ்.மணியம்) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று முற்பகல் (21) திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
நிகழ்ச்சி மேடையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஷகினி நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் அமர்ந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் திடீரென ஷகினி மீது தாக்குதல் நடத்தினார். இந்த கத்தி தாக்குதலில் ஷகினியின் கையில் படுகாயம் ஏற்பட்டது. […]
நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கிய ரோஸ்கோஸ்மோஸ்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷியா இடையே போட்டி நிலவுகிறது. அந்த […]
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 11 பேர் உடல் சிதறி பலி
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் வஜிரிஸ்தானில் உள்ள ராணுவச்சாவடி அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமான தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஷவால் என்ற பகுதி அருகே சென்றபோது திடீரென அந்த லாரியின் அடியில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்து சிதறியது. இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 11 பேர் உடல் சிதறி பலியாகினர். இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு […]
அமெரிக்காவில் இந்திய இளைஞன் தற்கொலை
அமெரிக்காவில் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு இந்திய இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய தம்பதி, தங்கள் 6 வயது மகனுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டன. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர்கள் யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல் (6) என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமொக்காவில் பால்டிமோர் கவுன்டி […]
31 வயதில் கர்ப்பமாகி 92 வயதில் கல் குழந்தை
சீனாவில் ஹுவாங் யிஜுன் என்ற பெண் 31 வயதில் கர்ப்பமாகி 92 வயதில் கல் குழந்தையைப் பெற்றெடுத்து 60 ஆண்டுகள் வயிற்றில் சுமந்து தாய்மையின் மகிழ்ச்சியைப் பெறாமல் மருத்துவ உலகையே அதிர செய்துள்ளது. ஹுவாங் யிஜுன் என்ற சீனப் பெண் 1948-ம் ஆண்டு தனது 31-வது வயதில் கர்ப்பமானார். தனக்கு குழந்தை பிறக்கப் போவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில நாட்களிலேயே அவளது மகிழ்ச்சி நீர்த்துப் போனது. எல்லோரையும், போலல்லாமல், அவள் கர்ப்பத்தில் ஒரு பிரச்சனையுடள் […]
காணி விவகாரத்தில் இ.தொ.காவின் கொள்கை என்ன? கிழக்கிலும் மலையகத்திலும் வேறுப்பட்ட பார்வை ஏன்?கலீலுர்ரஹ்மான் கேள்வி!
செந்தில் செய்வது சரியா? ஜீவன் செய்வது சரியா ? : இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கை என்ன – கேள்வி எழுப்புகிறார் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் மலையகத்துக்கு ஒரு முகத்தையும் மலையகத்துக்கு வெளியே கிழக்கில் ஒரு முகத்தையும் காட்டும் தொண்டமான்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இரட்டை முகங்களா? இதில் யார், எங்கு செய்வது சரி, பிழை என்று மக்கள் அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிங்களின் காணிகளுக்கு […]
அருவி மதன் இயக்கத்தில்” நூடுல்ஸ்’ செப் 8 உலகம் முழுவதும்
ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்பபடம். ‘ நூடூல்ஸ்” இதனை அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். செப் 8 ஆம் வெளியாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிது. இது குறித்து விஹஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது. நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கேள்வி கேட்டதுண்டு. சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு […]