சமாதான வீட்டுத்தோட்ட உபகரணங்களும், உலர் உணவு பொதியும் வழங்கி வைப்பு
நூருல் ஹுதா உமர் சமூக அபிவிருத்தி நிறுவனம் காரைதீவு ஸ்பீட் நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் 10 கிராமங்களை உள்ளடக்கியதாக சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் செயற்பாடுகள் ஊடாக 10 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராம ஒத்துழைப்பு மன்ற அங்கத்தவர்களின் இயலுமையை வழுப்படுத்தி அவர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு சமூக முரண்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது. இதனை குறைக்கும் நோக்குடன். குறிப்பிட்ட […]
ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் பாபர் அஸாமின் அதிரடி ஆட்டம்! 238 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி! நேபாளம் படு பள்ளம்!
ஆசியகிண்ணம் ஆண்களுக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதே ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடர் பாகிஸ்தானில் நேற்று ஆரம்பமானது. தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் நோபாள அணிகள் முல்டானில் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தானிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப நான்கு விக்கெட்டுக்களையும் 124 ( 27. 5 ஓவர்களில்) ஓட்டங்களுக்கு இழந்த பாகிஸ்தான் அணி 200 ஐ தாண்டுமா என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆயினும் அதிரடி ஆட்டக்காரரான பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் ரசிகர்களுக்கு இப்திகார் அகமட்டுடன் […]
நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் – செனட்டர் ஹோலன்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சில குடும்ப உறுப்பினர்களை Maryland செனட்டரான கிரிஸ் வேன் ஹோலென் சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் செனட்டர் பல தரப்பட்ட பிரிவினர்களை சந்தித்து வருகிறார்.. இந்த சந்தப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி ஷாங் அம்மையாரும் கலந்து கொண்டார் இதன்போது, “நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் அமெரிக்கா என்றும் துணை நிற்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உறவுகளை எண்ணி கவலையுடனே பயணிக்கின்றனர். […]
ஏறாவூரில் மழை வேண்டி விஷேட தொழுகை பிரார்த்தனை.
எம்.எஸ்.எம்.நூர்தீன் நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீங்கி மழை பொழிய வேண்டுமென விஷேட தொழுகையும் பிரார்த்தனையும் இன்று 30.08.2023 ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றன. ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா சபையின் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது மௌலவி எல்.எச்.அப்துல்லா ஹாஷிமி தொழுகை நடாத்தியதுடன், உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏ.எல்.சாஜித் ஹுஸைன் பாகவி பிரார்த்தனை நடாத்தினார். மார்க்க அறிஞர்கள், மதரசா மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பெரும் எண்ணிக்கையிலானோர் […]
அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் மரணங்கள்
அமெரிக்காவில் இளைஞர்கள் புதுவகை போதை பொருளுக்கு அடிமையாகி அதிக அளவு மரணங்கள் நடந்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் தரவுகளின்படி போதை பொருளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் வல்லரசு நாடான உள்ள அமெரிக்காவில் போதை பொருள் பழக்கம் பரவலாக இருந்து வரும் ஒன்றுதான். எனினும் தற்போது மிகப்பெரும் சமூக பிரச்சினையாக போதை பொருள் பழக்கம் மாறியிருக்கிறது. இந்நிலையில் […]
கனடாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கோவிட் திரிபு
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. பிஏ 2.86 என்னும் புதிய வகை கோவிட் திரிபு முதல் தடவையாக கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிட் திரிபுகளில் ஒன்றாக இந்த கோவிட் திரிபு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் தொற்று முதல் தடவையாக கனடாவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த திரிபின் வீரியம் மற்றும் பரவுகை தொடர்பில் தற்போதைக்கு எதிர்வு […]
கொலம்பியா பெண்ணைக் கொலை செய்த அவுஸ்திரேலியர்
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த அவுஸ்திரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Tatiana Dokhotaru (34), 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவரது கணவர் ஒரு அவுஸ்திரேலியர். அவரது பெயர் Danny Zayat (28). தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். மே மாதம் 27ஆம் திகதி, Tatianaவின் உயிரற்ற உடல் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தன்னை, தன் கணவர் தாக்குவதாக Tatiana பொலிசாருக்கு தகவலளித்தும், […]
அவுஸ்திரேலியாவில் சர்வஜனவாக்கெடுப்பு
அவுஸ்திரேலிய பிரதமரின் சர்வஜனவாக்கெடுப்பு அவுஸ்திரேலியாவில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 14ம் திகதி பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ், அவுஸ்திரேலிய மக்களை ஒன்றிணைப்பதற்கான சிறந்ததாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவித்துள்ளார். சர்வஜனவாக்கெடுப்பில் மக்கள் பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தால் பூர்வீக இன மக்கள் அரசமைப்பினால் அங்கீகரிக்கப்படுவார்கள் . அதுமட்டுமல்லாது சட்டங்கள் குறித்து […]
தொடருகிறது இம்ரான் கானின் சிறைதண்டனை
பாகிஸ்தானின் நாட்டில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. தோஷகானா வழக்கு என்று அழைக்கப்படும் இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செசன்சு கோர்ட்டு இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 5-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, இம்ரான்கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தோஷகானா வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட […]
காபோன் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காபோன். இந்நாட்டின் அதிபராக பங்கொ ஒடிம்பா (வயது 64). இவரது தந்தை ஒமர் பங்கொ 1967ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காபோன் நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் அவரது மகனான பங்கொ ஒடிம்பா 2009ம் ஆண்டு முதல் அதிபராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பங்கொ ஒடிம்பா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3வது முறையாக […]