சம்பந்தனும் ஹக்கிமூம் மனோவுமே மாகண சபை தேர்தல் பிற்போட காரணம்! காங்கிரஸ் தலைவர் மஜித் !
13ஐ முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபை தேர்தலை நடத்தும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம் மாகாண சபை தேர்தல் நடக்காமைக்கான காரணம் தமிழ் கூட்டமைப்பும் ஹக்கீமும், மனோ கணேசன் போன்றோரும்தான் என்ற உண்மையை மறைத்து நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, 13ஐ முழுமையாக அமுல்படுத்தாத நிலையில்தான் 88ம் ஆண்டு முதல் மாகாண சபைத்தேர்தல் […]
வெடிபொருட்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது
மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறை அரங்கேறி வருகிறது. இந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குகி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இரு குழுக்களுக்கு இடையே தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து திருடப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை மீட்கும்வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது என மக்களவைக்கான காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இரு தரப்புக்கும் […]
நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரிகள் அனுராக் தாகூர் மற்றும் அஸ்வின் வைஷ்ணவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறுகையில், ‘பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் […]
இங்கிலாந்தில் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசாங்கம் உறுதி
இங்கிலாந்தில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு […]
கொரியாவுக்கு தப்பியோடிய அமெரிக்க இராணுவ சிப்பாய்
அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த மாதம், எல்லை கடந்து வட கொரியாவுக்கு தப்பியோடிமைக்கு அமெரிக்க இராணுவத்திலுள்ள இனவாதமே காரணம் வட கொரியா தெரிவித்துள்ளது. ட்ரேவிஸ் கிங் எனும் 23 வயதான அமெரிக்க சிப்பாய், கடந்த மாதம் தென் கொரியாவிலிருந்து வட கொரியாவுக்குள் நுழைந்தார். அவர் புகலிடம் கோருவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார் எனவும் வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இவ்விடயத்தை தான் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்படி சிப்பாயை பாதுகாப்பாக […]
அமெரிக்க நீதிபதி ஒருவரின் வீட்டில் 47 துப்பாக்கிகள்
மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி ஒருவரின் வீட்டில் 47 துப்பாக்கிகளும் 26,000 தோட்டாக்களும் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் நீதிபதிகளில் ஒருவரான ஜெப்ரி பேர்குசன் (70), கடந்த வருடம் மதுபோதையில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற போதே மேற்படி விடயம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்கு அருகிலுள்ள உணவு விடுதியொன்றில் பேர்குசனுக்கும் 65 வயதான […]
தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம்
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள்து.
கனேடிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் அக்ஷய் குமார்
கனேடிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் அக்ஷய் குமார் குறித்து – நீண்ட நாள் சர்ச்சை பிரபல இந்திய நடிகரான அக்ஷய் கனேடிய குடியுரிமை வைத்திருப்பது தொடர்பில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவிவந்தது. அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே இந்தியனாகத்தான் இருப்பேன் […]
கனடாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு
கனடாவில் கோவிட் தொற்று அதிகரித்துச் செல்வதாக கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைவடைந்து சென்ற நிலையில், தற்பொழுது மீண்டும் இந்த நிலையில் மாற்றம் பதிவாகியுள்ளது. இந்த ஏற்ற இறக்க நிலைமையானது எதிர்காலத்தில் கோவிட் தொற்றாளர் அதிகரிப்பு ஏற்படக்கூடியதன் அறிகுறியாக இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக றொரன்டோ மவுன் சினாய் வைத்தியசாலையின் மருத்துவர் எலிசன் […]
காதல் வலைக்குள் சிக்கிய விஜய் ஆன்டனி! “ரோமியோ” வாக மாறிவிட்டாரா?
ஆக்ஸன் , அமைதியான கேரக்டர்களில் தனக்கென ஒரு வழியை உருவாக்கிய நடிகர் இசையமைப்பாளர் இயக்குநர் விஜய் ஆன்டனி தற்போது காதல் வலைக்குள் மாட்டிக்கொண்டார். இவரது புதிய திரைப்படம் ” ரோமியோ” என்று பெயரிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளிவருகிறது. இது குறித்து விஜய் ஆன்டனி டூவிட்டரில் தெரிவித்துள்ளதாவது என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி🙏 உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது😊 ROMEO❤️ என […]