கல்முனை தாருல் அர்கம் முன்பள்ளி பாடசாலையின் சிறுவர் சந்தை!
நூருல் ஹுதா உமர் கடந்த 18 வருடங்களுக்கு மேலாக கல்முனையில் இயங்கி வரும் தாருல் அர்கம் முன்பள்ளி பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை முகாமைத்துவப் பணிப்பாளர் அமீர பாறூக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை கமு/கமு/ அஸ்-ஸூஹறா வித்தியாலய […]
மீளப் பெற்றுக் கொள்ளப்படும் டொயோட்டா ரக வாகனங்கள்
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் டொயோட்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொயோட்டா ரக சில வாகனங்களில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த மாடல் வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனத்தின் பிளாஸ்டிக் எரிபொருள் குழாயில் காணப்படும் பிரச்சினை காரணமாக இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட Tundra and Tundra Hybrid pickup trucks ஆகிய மாடல்களே இவ்வாறு […]
மடுவில் திடீரென மரணித்த ஊடகவியலாளர் பாம்புக் கடியினாலேயே இறந்துள்ளதாக தெரிவிப்பு!
(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மடு பெருவிழாவை முன்னிட்டு இவ் விழாவினை மன்னார் கத்தோலிக்க மீடியா மூலம் நேரலையாக ஒளிப்பரப்பச் சென்ற மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம் பாம்புக் கடியினாலேயே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஞாயிறு (13) இரவு மருதமடு அன்னையின் ஆலயப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மடு ஆவணி பெருவிழாவை முன்னிட்டு பத்து தினங்களும் நேரலையாக மன்னார் கத்தோலிக்க மீடியா முலம் அனுப்புவதற்காக செயல்படுத்தச் சென்ற மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் […]
வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம். எதிர்வரும் ஞாயிறு!
( வாஸ் கூஞ்ஞ) வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 20.08.2023 ஞாயிறு காலை 10 மணிக்கு வவுனியா கத்தானந்h இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளதாக இப்பொதுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.செல்வகுமரன் தெரிவித்துள்ளார். ஆகவே தங்கள் பிரதேச செயலங்களில் பணியாற்றும் இச்சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளுக்கு அமைவாக அனுமதிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இச்சங்கத்தில் யாழ்ப்பாணம் . கிளிநொச்சி , வவுனியா […]
குறைவான சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்குச் செலுத்த அனுமதிக்காதீர்- பேராயர்
( வாஸ் கூஞ்ஞ) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம். குறைவான சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்குச் செலுத்தவோ உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம். மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா செவ்வாய் கிழமை (15) இடம்பெற்றது. இப்பெருவிழாவின் கூட்டுத்திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் […]
கோரிக்கை நிறைவேறியது! வேலைநிறுத்தத்தை கைவிட்ட டெமேரியாA தொழிலாளர்கள்!
ராமு தனராஜ் டெமேரியா A. தோட்ட தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்த்துக்கு மற்றுவதற்குதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நேற்று முன் தினமும் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்றைய தினம் கைவிடப்பட்டது இலங்கை தேசிய தோட்ட தொழிலார் சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய இரண்டு தொழில் சங்க பிரதிநிதிகள் இணைந்து தோட்ட நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டதன் பின்னர் வேலை நிறுத்த […]
சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரம் அலீ நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை ஊழியர்கள் சுகாதார அமைச்சின் முன்பாக தற்போதைக்கு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்கள் கடந்த 2014ம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை ஊழியர்களுக்கு இதுவரை உரிய முறையில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது சில மாதங்களில் ஊதியத்தில் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்பட்டதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி அவர்கள் தற்போது சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை […]
நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு புதிய தண்ணீர் பவுசர் கையளிப்பு
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் பவுசர் ஒன்றினை கோயிகா (KOICA) மற்றும் யூ , என் ஹெபிடாட் (UN – HABITAT ) நிறுவனங்கள் ஒன்றினைந்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) நிகழ்வு […]
சுற்றாடல் கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டலும் தொப்பி அணிவித்தலும்
நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் சுற்றாடல் கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டலும் தொப்பி அணிவித்தல் மற்றும் அடையாள அட்டை விநியோகமும் கல்லூரி அதிபர் ஐ.உபைதுல்லா தலைமையில் கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 25 மாணவர்கள் இச்சுற்றாடல் கழகத்தில் இணைந்து சூழலைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். “சுற்றாடலை பாதுகாப்போம் சுற்றாடல் நம்மை பாதுகாக்கும் ” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் தபால்காரரின் கதை சொல்லும் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 உலகம் முழுவதும்!
திரையுலகத்தினர் மட்டுமல்ல நல்ல சினிமாவை ரசிக்கக துடிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கும் திரைப்படம் ” ஹர்காரா” வெள்ளைக்கார்கள் ஆட்சி செய்த காலத்தில் கடமை புரிந்த முதலாவது தபால்காரரின் கதையே ஹர்காரா என படக்குழுவினர் கூறுகின்றனர். காளி வெங்கட் நடிக்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வெளியாகிறது. இந்த படத்தை ராம் அருண் கேஸ்ரோ இயக்குகிறார். Trailer