மலையக ரயில் சேவை பாதிப்பு!

மலையகத்திற்கான ரயில் சேவை  தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹில கோட்டே ரயில் நிலையத்திற்கும் பாலான்ன ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரமொன்று சரிந்து விழுந்துள்ளது. அதனால் மலையக ரயில் சேவை தடங்கலாகி இருக்கிறது. மரத்தை அகற்றும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவினர் கூறுகின்றனர்.  

74 ஓட்டங்களுக்கு சுருண்டது கொழும்பு அணி! தகுதிகானுக்குள் நுழைந்த காலி!!

LPL2023 ன் 20 வது T2போட்டி இன்று நடைப்பெற்றது.கொழும்பு ஸ்ரைக்கஸ் காலி டைட்டன்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தகுதிகான் போட்டிகளுக்கு  தெரிவு செய்யப்படும் இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்நிலையில் இரண்டு அணிகளும் இன்று மோதின. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற காலி அணி எதிர் அணியான கொழும்பு அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதன்படி 15.4 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. LPL சரித்திரத்தில் ஒரு அணி […]

தங்காலையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி!

  (சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் அலீ) தங்காலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி தங்காலையில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் தங்காலை, குடாவெல்ல, நாகுளுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது

உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயல் திட்டம்!

நூருல் ஹுதா உமர். ஆசிய மன்ற நிதி உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற ” உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளினூடாக இளைஞர்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின்” கீழ் இளைஞர்களை தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வு திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் என். சிவகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இலங்கை உள்ளுராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகரவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இலங்கை உள்ளுராட்சி […]

” லியோ” Harold Das அறிமுகம்! அர்ஜுன் பிறந்த நாள் பரிசு

லோகஷ் கணகராஜ் இயக்கதில் தளபதி விஜய் நடிக்கும் மிக பிரமாண்டமான திரைப்படம் “லியோ” இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷன் கிங் அர்ஜூன்  HaroldDas கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகஸ்ட் 15  அவரது பிறந்த தினம் அதனை முன்னிட்டு இன்று விசேட  வீடியோவை இயக்குனர் லோகேஷ்  வெளியிட்டார் And now meet #HaroldDas 🔥🔥Thank you @akarjunofficial sir for the extraordinary efforts you’ve put in for this film! Wishing our #ActionKing a very […]

13 ஆவது திருத்தச்சட்டம்! தமது நிலைப்பாட்டை மகாசங்கதினரிடம் சஜித் தெரிவிப்பு

நலீர் அகமட் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மகாசங்கத்தினர் முன்னிலையில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும்,ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும்,நாட்டின் அனைத்து […]

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி ! ஜனாதிபதி ரணில் மடு ஆலயத்தில் உரை!

(வாஸ் கூஞ்ஞ0 மன்னாரை ஒரு வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ந் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். செவ்வாய்கிழமை (15) மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில் மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது நாட்டு […]

மருதமடு அன்னையின் பெருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்! ஜனாதிபதி பங்கேற்பு.

( வாஸ் கூஞ்ஞ)நீண்ட காலத்துக்குப் பின் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவுக்கு பெருந் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜனாதிபதி மற்றும் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவரும் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும். மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா செவ்வாய் கிழமை (15) காலை இடம்பெற்றது. இப்பெருவிழாவின் கூட்டுத்திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க […]

காரியாலயத்தை மாற்றாதே ! பசறை டெமரியா A தோட்டத்தொழிலாளர்கள் 2 வது நாளாக பணி பகிஷ்கரிப்பு!

ராமு தனராஜா டெமேரியா A தோட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினமும் இன்றைய தினமும்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதுளை- பசறை டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் இன்றும் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெமேரியா A தோட்டத்தில் இதுவரையில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தே தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு […]

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தி

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;- இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் […]