பிள்ளைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
நூருல் ஹுதா உமர். நாட்டில் தற்போது சின்னமுத்து (Measels) நோய் சிறுவர்களிடயே வேகமாக பரவிவருவதானால் குழந்தை பிறந்து 09 மாதங்கள் மற்றும் 03 வயதில் போடப்படும் தடுப்பு ஊசி ஏற்றிக்கொள்ளதவர்கள் உடனடியாக ஏற்றிக்கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், திங்கட்கிழமைகளில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும், செவ்வாய்க்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், புதன்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் […]
மேர்வின் சில்வா தமிழர்களுக்கு எதிராக பேச காரணம் தமிழ் கூட்டமைப்பே – காங்கிரஸ் தலைவர் மஜித்!!
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கெதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இனவாதமாக பேசும் நிலையை ஏற்படுத்தியவர்கள் தமிழ் கூட்டமைப்பினரே என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடமாகாணத்தில் பௌத்த மதஸ்தலங்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் அங்குள்ளோரின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என மேர்வின் கூறியது மிக கடுமையான தவிர்க்க வேண்டிய வார்த்தையாக இருப்பினும் அவரது சமூக அக்கறை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவரை ஆக்கிய தமிழ் […]
தங்கர்பச்சானின் ” கருமேகங்கள் கலைகின்றன” ட்ரைலர் வெளியீடு!
அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு, உட்பட பல வெற்றிபடங்களை இயக்கிய தங்கர் பச்சான் அவருகளுடைய புதிய திரைப்படமான “கருமேங்கள் கலைகின்றன” எதிர்வரும் செப்டம்பர் 1 உலகம் முழுவதும் வெளியாகின்றது. இதில் இயக்குனர்களான பாரதிராஜா கௌதம் வாசுதேவன் ‘நகைச்சுவை தளபதி ” யோகி பாபு அதித் பாலன் உட்பட பலர் நடிக்கிறார்கள். இசை ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. நீதியரசர் சந்துரு அவர்கள் அதனை வெளியிட்டார். இது தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் விடுத்துள்ள […]
அம்பாறை மாவட்டம் இனம் மதம் பேதமின்றி அபிவிருத்தி செய்யப்படும்- சஜித்
நலீர் அகமட் நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக சம்மாந்துறை,கல்முனை, அம்பாறை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அம்பாறை மாவட்டமும் எந்த மதத்தையும் இனத்தையும் ஓரங்கட்டாமல் முழு மாவட்டத்தையும் ஒன்றிணைத்து சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ளவதாகவும், மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சம்மாந்துறை,கல்முனை,அம்பாறை மற்றும் பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களினால் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரச பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கும் […]
மடு ஆலய சூழலில் தங்கியிருப்போர் விஷ ஜந்துக்கள் குறித்து அவதானம்!
(வாஸ் கூஞ்ஞ)மன்னார் மருதமடு ஆலயப் பகுதியில் கடந்த ஓரிரு தினங்கள் ஒரு சில மணி நேரம் பெய்த மழை காரணமாக பல்வேறுபட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறியமையால் மடு ஆலய சூழலில் தங்கியிருப்போர் விஷ ஜந்துகளால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டமையால் இங்கு தங்கி வாழ்வோர் விழிப்புடன் இருக்கும்படி மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதம் பெருவிழாவுக்கு (15) ஏழு லட்சம் பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் […]
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் மாயம்
சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
எலான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர் இல்லை
கடந்த மாதம் முதல் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டுவிட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே சிறிய உரசல் இருந்து வருகிறது. ஏனெனில், கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி மார்க் ஜூக்கர்பெர்க் ‘திரெட்ஸ்’ என்ற செயலியை டுவிட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்தார். தற்போது இருவரும் வெவ்வேறு கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து மார்க் ஜூக்கர்பெர்க் தனது திரெட்ஸ் பக்கத்தில், “எலான் எதையும் தீவிரமாக […]
அமெரிக்காவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ ஐவர் பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தீவிபத்து ஏற்பட்ட வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால், சுற்றியுள்ள 9 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்களும், கதவுகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் காயமடைந்த […]
கனேடியர் ஒருவர் செய்த செயலால் 12 வயது சிறுமி கடுமையாக பாதிப்பு
தன் காதலி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத கோபத்தில், கனேடியர் ஒருவர் செய்த செயலால், 12 வயது சிறுமி ஒருத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாள். கனடாவின் Ottawa நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழும் தனது முன்னாள் காதலியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற டேவிட் என்பவரை வீட்டுக்குள் அனுமதிக்க அந்த பெண் மறுத்துள்ளார். ஆத்திரத்தில், வேறொரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார் டேவிட். அந்த வீட்டுக்குள் சுமையா என்னும் 12 வயது சிறுமி இருந்திருக்கிறாள். கதவை உட்புறமாகப் பூட்டிய டேவிட், சுமையாவைப் […]
கனடாவில் தேசிய கீத வரிகள் தொடர்பில் முரண்பாடு
ஆங்கிலம் பேசும் கனடியர்கள் மத்தியில் தேசிய கீதம் தொடர்பில் முரண்பாடு கனடாவில் தேசிய கீதத்தின் வரிகள் தொடர்பில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது. ஆங்கிலம் பேசும் கனடியர்கள் மத்தியில் தேசிய கீதத்தின் வரிகள் தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது. “ஓ கனடா” என்னும் தேசிய கீதத்தின் வரிகளை மாற்றி அமைப்பது தொடர்பில் இவ்வாறு முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரபல ஆய்வு நிறுவனமான ரிசர்ச் கோ என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்துக் […]