பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் முறைப்பாடு
கனடாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த தொழிலதிபர் வயது குறைந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான பியூச்சர் எலக்ட்ரானிக்ஸ் என்னும் நிறுவனத்தின் பிரதான மீது இவ்வாறு பிரதானியான ராபர்ட் மில்லர் என்பவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது. சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இந்த தொழிலதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர்களிடம் பாலியல் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த 28 […]
மேர்வின் தலையில் சுகமில்லை! அவரின் கருத்து பாரதூரமானது!மனோ
“தமிழரின் தலை பற்றி பேசும” மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கிறார். தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தை திருடர்கள், தரகு பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்த குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டு தரகு பணம் பெரும் […]
யாழ்ப்பாண கற்கோவளம் ராணுவ முகாமை அகற்ற மக்கள் எதிர்ப்பு
‘செய்தி புயல்” அஸ்ரப் அலீ யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றை அகற்றும் தீர்மானம் தொடர்பில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர் யாழ்ப்பாணம், கற்கோவளம் அருகே அமைந்துள்ள சிங்க ரெஜிமண்ட் படைப்பிரிவின் முகாம் ஒன்றை எதிர்வரும் நாட்களில் அகற்றிக் கொள்ள படைத்தரப்பு தீர்மானித்துள்ளது இந்நிலையில் குறித்த செய்தி அறிந்து பிரதேசவாசிகள் முகாம் நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ராணுவத்தினர் இருக்கும் வரையே தாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும், அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து […]
ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரீஸ் எம்.பி!!
நூருல் ஹுதா உமர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனை கிளை உறுப்பினர்களுக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனை பள்ளி வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்முனை மக்கள் எதிர்நோக்கும் சமூக, சமய, கலாச்சார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றியும் கல்முனையின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது […]
தேசபந்து தென்னகோனின் பேஸ்புக் பக்கத்தை ஊடுருவிய கறுப்பு ஆடு யாரு?
” செய்தி புயல்” அஸ்ரப் அலீ மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன் பேஸ்புக் பக்கம் மர்ம நபர்களால் ஊடுருவப்பட்டுள்ளது அது குறித்து அவர் தனது பேஸ்புக் ஊடாக அறிவித்துள்ளார் மேலும் ஊடுருவப்பட்டுள்ள தனது பேஸ்புக் பக்கத்தில் வௌியாகும் செய்திகளுக்கு தான் பொறுப்பில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் ஒரு சமூகசீரழிவுக்கான திறப்பு விழாவா !! பசறை மக்களின் ஆதங்கம்! தீர்க்குமா அரசாங்கம்!
ராமு தனராஜா மலையகத்தில் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக மது சாலைகளால் மலையக சமூகம் திண்டாடுகிறது இந்த நேரத்தில் பதுளை பசறை 10ம் கட்டையில் புதிய மதுவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஆயத்தப் பணிகள் நடக்கின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மலையகம் 200 இல் ஏதாவது நல்லது நடக்காதா என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த நேரத்தில் மேலும் புதிதாக சாராயக் கடைகள் திறப்பதற்கான தேவைகள்தான் என்ன இதனால் பெரும் புள்ளிகளுக்கே இலாபம். பதுளை பசறை பத்தாம் கட்டையில் திறக்கப்பட இருக்கும் […]
போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது
அஸ்ரப் அலீ போலந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் நேற்று அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் சுமார் 160 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு போலந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டுள்ளனர் பெலாரஸ் எல்லை வழியாகவே இவர்கள் போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையர்கள் மாத்திரமன்றி எகிப்து, சோமாலியா, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது
மருதமடு ஆலயப் பகுதியில் தொலைக்காட்சி தொகுப்பாளர் திடீர் மரணம்!.
( வாஸ் கூஞ்ஞ) 14.08.2023 மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதத்தின் பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பும் மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம். இச்சம்பவம் ஞாயிறு (13) இரவு மருதமடு அன்னையின் ஆலயப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவணி பெருவிழா கடந்த 06.08.2023 அன்று ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இப்பெருவிழா செவ்வாய்கிழமை 15.08.2023 அன்று காலை பெருவிழாத் திருப்பலியுடன் நிறைவுபெறுகின்றது. இப்பெருவிழா கத்தோலிக்க நிகழ்வுகளை நேரலையாகத் தொகுத்து அனுப்பும் […]
பம்பலப்பிட்டி பஸ் விபத்தில் எட்டுப் பேர் காயம்
பம்பலப்பிட்டி சந்தி அருகில் இடம்பெற்ற லொறி-பஸ் விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறி ஓடிய கதிர்காமத்துக்கான தனியார் பேரூந்து ஒன்றும், போக்குவரத்து சிக்னல் பிரகாரம் முன்னால் நகர்ந்த லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது காயமடைந்தவர்கள் தற்போது தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிந்த வடக்கு கிழக்கிலே நாவலடியில் ஆபத்து ! இணைந்தால் முஸ்லிம் மக்களின் நிலை என்னவாகும்? கலீலுர் ரஹ்மான் கேள்வி?
நூருல் ஹுதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13ம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் இந்நிலையில் பிரிந்த வடக்கு கிழக்கிலையே சாணக்கியன் எம்.பி போன்றவர்களின் அடாவடித்தனம் இவ்வாறு இருக்கிறது என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன ? என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. […]