பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம்
கர்நாடகத்தில் நாங்கள் செய்த பணிகள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கப்படும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது . பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா , துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . இந்த […]
மன்னாரில் வாகனம் தடம்புரண்டு விபத்து!
(வாஸ் கூஞ்ஞ) மதவாச்சி மன்னார் ஏ14 வீதியில் பயணித்த வாகனம் ஒன்று தடம் புரண்டதில் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் செவ்வாய் கிழமை (29) இரவு ஒன்பது மணியளவில் மன்னார் நொச்சிக்குளம் இடத்துக்கு அரகாமையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது எலிபன்ட் கவூஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் இக் கம்பனியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மன்னாருக்கு விற்பனை செய்வதற்காக சம்பவம் அன்று அவிசாவலையிலிருந்து மன்னாருக்கு வந்துள்ளது. இவ்வாகனத்தில் சாரதி உட்பட இருவர் பயணித்துள்ளனர். சம்பவம் அன்று […]
லிந்துல்லை வலஹா தோட்டத்தை சேர்ந்த வீரசாமி பெஞ்சமீன் மண்வெட்டியால் அடித்து கொலை!
கௌசல்யா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்று (29) இரவு ஏற்பட்ட கைகலப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அயல் வீட்டில் உள்ள ஒருவர் மண்வெட்டி தடியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று (30) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்பவரே இவ்வாறு […]
“எமது உறவுகள் எமக்கு வேண்டும்’ , ” மதவாதம் வேண்டாம்” மட்டுநகரில் கவனயீர்ப்பு போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று, மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது. இந்நிகழ்வில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் […]
நான் மக்களுக்காகவே பேசுகிறேன்.ஆதலால் என் வாயை யாராலும் மூட முடியாது – சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போது தேவையற்ற கேள்விகளை கேட்டு பாராளுமன்றத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக இரு அரச பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டிருந்தால் அது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும்,மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கடமையை சரியாகச் செய்வதை ஏற்றுக்கொண்டமையே மகிழ்ச்சிக்குக் காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் துறையில் பல ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட […]
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!
(வாஸ் கூஞ்ஞ) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் அனுட்டிக்கப்பட;டுள்ளதை முன்னிட்டு இன்றைய தினம் (30) மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த எட்டு மாவட்டத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் புதன்கிழமை (30) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிய ஜனநாயகப் போராட்டத்தை மன்னாரில் நடாத்தினர். இப்போராட்டமானது வடக்கு தழுவிய சமூக அமைப்புக்களினால் காலை 10.30 மணிக்கு மன்னார் சதொச மனித புதைகுழிக்கு அருகில் இருந்து ஆரம்பமாகி மன்னார் நகரசபை விளையாட்டு […]
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 வது ஜனனதினம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும், பெருந்தலைவருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன்போது, விசேட அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிகழ்வின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் […]
நிலாவெளியில் விகாரை நிர்மாணிக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை! ஆளுநர் செந்தில் தகவல்
திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் பௌத்த விகாரையை நிர்மாணிப்பதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என கிழககு மாகண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் எமக்கு தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பௌத்த பிக்குகள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நடுவே சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்போது தாம் உரியவருகளுடன் கலந்துரையாடல் செய்து தக்க முடிவை அறிவிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். ஆயினும பௌத்த பிக்கு தமக்கை விகாரை நிர்மாணிக்க அனுமதி கிடைத்திருப்பதாக ஊடகங்களுக்கு […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்களும் சென்னை திரும்பினர்!
சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களும் விடுதலையாகி சென்னை திரும்பியுள்ளனர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த, 10 மீனவர்களை கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்திய மத்திய, தமிழ்நாடு மாநில அரசுகளின் நடவடிக்கையால், 10 மீனவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நேற்று காலை கட்டுநாயக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 10 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி […]
பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு கிழக்கில் நிரந்தர நியமனம் !
பாறுக் ஷிஹான் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை கிழக்கு மாகாண அரச சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (29) மாலை அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையின் பிரதான கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நியமனக்கடிதம் வழங்கும் வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம் அதாஉல்லா, டபிள்யூ.வீரசிங்க, விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, கிழக்கு […]