மில்லியன் ரூபா தள்ளுபடி! மக்கள் மீது வரிச் சுமைகள்! : COOP குழுவில் சாணக்கியன்!
மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில், மாகா உட்பட 15 நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 793 மில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் பாரளுமன்ற கோப் குழு கூட்டத்தில் கூறி இருக்கிறார். அத்துடன் மாகா நிறுவனம் செலுத்த வேண்டிய 482 மில்லியனை குறைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கோப் குழுவில் நடந்த கூட்டத்தின் போது இதன் விடயம் வெளிப்படுத்தப்பட்டது அதன் போது நானும் அக் கூட்டத்தில் […]
இந்தியாவிற்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய மே.தீவுகள்!,இறுதி போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 5 ஆவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிம இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169; ஓட்டங்களை பெற்றது. இதில் சூரியகுமார் யாதவ் வன் மேன் ஷோ காட்டினார். அவர் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4. பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் பந்து வீச்சில் ரொமரி சப்ர்ட் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவானர். வெற்றி […]
அமைச்சர் ஜீவன் தலைமையில் தொழிலாளர் பாதுகாப்பு சுகாதாரம் குறித்து ஆராய்வு!
சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அனுசரனையுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது 200 வருடங்கள் ஆகியும் மலையக தோட்டத்துறையினரின் பாதுகாப்பும், சுகாதாரமும் இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதார உரிமைகளையும், தொழில்சார் உரிமைகளையும் மீட்டெடுக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கு இதன்போது […]
பசறையில் புதிய மதுபானசாலை வேண்டாம்! வடிவேல் சுரேஷ் தலைமையில் போராட்டம்
நடராஜா மலர்வேந்தன் பசறை 10ம் கட்டை சந்தியில் புதிய மதுபானசாலை அமைப்பதை எதிர்த்து இன்று பாராளுமன்ற உறுப்பினர் .வடிவேல் சுரேஸ் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இதில் கலந்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
3 முறை கனடா கோவில்களின்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுர்ரே நகரில் பழமையான கோவில்களுள் ஒன்றான லக்ஷ்மி நாராயண் மந்திர் ஆலயம் உள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு அந்த கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசமாக்கி உள்ளனர். அதன்பின்னர் கோவிலின் கதவில் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அதில் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு பங்கு உள்ளது, உடனடியாக கனடா அரசு இதுகுறித்து விசாரணை நடத்த […]
60 வயதில் B.A பட்டதாரியான முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க!
பல்வேறு பிரச்சினைகள் வந்தாலும் தமது நோக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு சிறப்பான உதாரணம் இலங்கை சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரும் முன்னாள் M.P யுமான ரஞ்சன் ராமநாயக்க. இவர் தனது 60 வயதில் கொழும்பு திறந்த பல்கலைகழகத்தில் தமது கலைப்பட்டத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்!
பிரித்தானியாவில் 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டம்
பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால் பிரித்தானியாவில் அதன் பாதிப்பு அதிகமானது. அதன் ஒருபகுதியாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பணவீக்கம் தாறுமாறாக எகிறியது. இதனால் பிரித்தானியாவி; ரயில்வே, விமான நிலையம், தபால் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் […]
வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்
அஷ்ரப் அலீ நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வாகன இறக்குமதிக்கான தடை இவ்வாரம் முதல் படிப்படியாக நீ்க்கிக் கொள்ளப்படவுள்ளது அதன் முதற்கட்டமாக லொறி, ட்ரக் மற்றும் பேரூந்துகளுக்கான இறக்குமதித் தடை நீக்கப்படவுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வௌிவரும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பொறுத்து எதிர்வரும் செப்டம்பருக்குள் வாகன இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்கிக் கொள்ளப்படும்
ஈபிள் டவரில் வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்
பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் சிறந்ததாக விளங்கி வருகின்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர் உள்ளது. இவ்வாறான நிலையில், ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இனறைய தினம் (12-08-2023) மிரட்டல் […]
சாய்ந்தமருதுக்கு பெருமை தேடித்தந்த கலாசார மத்திய நிலைய மாணவர்கள்!
நூருல் ஹுதா உமர்கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா – 2023 போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு பிள்ளையாரடி மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்றது. இந்தப் போட்டிகளில் சுமார் 15 க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் முஸ்லிம் பிரிவில் சுமார் 07 மத்திய நிலையங்கள் கலந்து கொண்டன. இந்த மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் […]