போதைப்பொருள் கடத்தல் – “குணா” உட்பட 13 இலங்கையர்களும் நடிகை வரலட்சுமியின் உதவியாளரும் கைது! போதைப்பணம் சினிமாவில் முதலீடா?

போதைப்பொருள், ஆயுதக்கடத்தில் வழக்கில் நேரில் ஆஜராகும்படி  நடிகை வரலட்சுமிக்கு லனாய்வு ஏஜென்சி  வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயினும் தமக்கு அவ்வாறான சம்மன் எதுவும் வரவில்லை என வரலட்சுமி சரத்குமார் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளார். போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் உதவியாளரான ஆதிலிங்கம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆதிலிங்கம் குறித்த தகவல்களை பெற நடிகை வரலட்சுமிக்கு, நேரில் ஆஜராக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது […]

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் சசிகலா வருவாரா? நீதிமன்றம் இன்று விசாரணை!

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே பல வழக்குகள் நடைபெற்று ஒருவழியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை உறுதி செய்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதனை கொண்டாடும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கோதாவுடன் அண்மையில் மதுரையில் மிக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.   ஆனால் மதுரை மாநாடு மூலம் பெற்ற […]

தையிட்டியில் போராட்டம் இரவிரவாக தொடர்கிறது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரை அகற்றப்படவேண்டும் , பொது மக்கள் காணியை  பொது மக்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்  கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்தனர். பாரளுமன்ற உறுப்பினரான செல்வராஜா  கஜேந்திரன் உட்பட பலர் முழு இரவும் அந்த இடத்திலே இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று இரவு  7.00 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனது டூவிட்டரில் போராட்ட  படங்களை வெளியிட்டுள்ளார். […]

வாகரை வீதியில் விபத்து : ஓட்டமாவடியைச்சேர்ந்த இரு இளைஞர்கள் காயம்!

தகவல் : நியாஸ் ஹாஜியார் அகீல் அவசர சேவைப்பிரிவு வாகரை வீதியில்  இடம்பெற்ற  வாகன விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த இரு இளைஞர்கள் காயம்டைந்துள்ளனர். நேற்று (29) மாலை 7 மணியளவில் திருமலை – வாகரை வீதியில் வாகரையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வரும் வழியில் உசன ஏற்றத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டமாவடியைச்சேர்ந்த நபரொருவருக்குச் சொந்தமான சிறிய ரக லொறியொன்றுடன் மோதுண்டதில் இரு இளைஞர்கள் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் […]

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுங்கள் ! ஸ்ரீரங்காவின் மனுவை மேல் நீதிமன்றம் நிராகரிப்பு!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வாகன விபத்து தொடர்பில் தாம் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் பாரபட்சமான நடத்தை காரணமாக வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை […]

காத்தான்குடியிலிருந்து கொழும்பு வந்த பஸ் விபத்து ! சாரதி பலி, பலர் காயம்

அஸ்ரம் அலீ காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் ஒன்றும், நிறுவனமொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற இன்னொரு வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் இச்சம்பவம் நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்றுள்ளது. விபத்தில்  சாரதி உயிரிழந்துள்ளதுடன், இன்னும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நான் கஷ்டத்தை கேட்டு படம் நடிப்பவன்! ” லக்கிமேன்’ யோகி பாபு

தான் கதை கேட்டு படம் பண்ணுவது கிடையாது,  என  நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.  திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்து இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள லக்கிமேன் திரைப்படம் வரும் செப்.1-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் யோகி பாபு,  வீரா, அப்துல், நடிகைகள் ரெய்ச்சல் ரெபீகா, சுஹாசினி குமரன்,  இசையமைப்பாளர் சான் ரோல்டன் […]

முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு

முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை நீதியமைச்சில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூக தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப்பலரும் கந்து கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் மும்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த ஆவணங்கள் அமைந்திருந்தன. இது பற்றி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி அவர்கள் […]

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் போதையொழிப்பு பேரணியும், வீதி நாடகமும் !

நூருல் ஹுதா உமர் இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன்  அனுசரணை வலையமைப்பு  நிறுவனமான “இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலாவின் ஒருங்கமைப்பில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.எஸ். அன்ஸார் மௌலானா  தலைமையில் போதையொழிப்பு பேரணியும், வீதி நாடகமும் இன்று கல்முனையில் இடம்பெற்றது. கல்முனை […]

பாரிஸ் ஸ்ரீ கணேஷ் ஆலய வருடடாந்த தேர் திருவிழா!

பாரிசில் இருந்து – ஊடகவியலாளர் – இருளப்பன் ஜெகநாதன் ஸ்ரீ கணேஷ் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 27 ஆம் திகதி வெகு விமரிஷியாக நடைபெற்றது. ஆகஸ்ட் 27, 2023 அன்று பாரிஸ் லா சப்பல் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா ஊர்வலம் காலை 10:30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. ஐரோப்பாவிலேயே அதிகமான பக்தர்கள் வருகை தரும் ஒரு திருவிழாவாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. மயில் ஆட்டம் , சிலம்பு […]