இலங்கையில் மீண்டும் தலை தூக்கும் பிரமிட் மோசடி கும்பல் !

சுயாதீன ஊடகவியாலாளர் இருளப்பன் ஜெகநாதன் உங்கள் வாழ்க்கையே மாறப்போகுது ! ஒரு தடவை மீட்டிங் அட்டென்ட் பண்ணி பாருங்க ! நானும் உங்கள மாதிரி தான் பணக்கஷ்டத்துல இருந்தேன் ! இன்னைக்கு நான் சொந்த வீடு – கார் நல்ல வருமானம் கஷ்டமே இல்லாம பல இலட்சங்களை சம்பாதிக்கிறேன் ! அருமையான திட்டம் ! நான் சொல்றத விட பேசமா நீங்களே ஒரே ஒரு தடவை மீட்டிங் அட்டண்ட் பண்ணுங்க ! அப்புறம் பாருங்க ! உங்க […]

இம்ரானுக்கு பிணை! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அஸ்ரப் அலீ பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அத்துடன் அவருக்கு பிணை வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவருக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த வருட இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இம்ரான் கானுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது முன்னதாக அவருக்கு ஐந்து வருடங்கள் அரசியலில் ஈடுபடத் தடை […]

பாசிகுடாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டம் !

  அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாகத் திகழும் அதிகளவான நட்சத்திர விடுதிகளையும், அழகிய கடற்கரை அமைப்பினையும் கொண்ட கோறளைப்பற்று பாசிக்குடா பகுதியில் சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தி அதனூடாக மாவட்டத்திற்கான வருமான மட்டத்தினையும், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களையும் அதிகரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஏனைய சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், முகாமையாளர்களுடன் […]

எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொக்கிஷங்களை மீள ஒப்படைக்கும் நெதர்லாந்து

இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கலை பொக்கிஷங்களை மீள ஒப்படைப்பதாக நெதர்லாந்து அரசாங்கம் உறுதிமொழி  வழங்கியுள்ளது. இலங்கையின்  வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அலிசாப்ரி அவர்கள் நெதர்லாந்து அரசாங்கத்தின் கலை மற்றும் ஊடக செயலாளர் உடன் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார் இந்த இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், மேலும் விஸ்தரிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. டச்சு ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆறு கலை பொக்கிஷங்களை மீளவும் இலங்கையிடம் […]

பாலி கடல் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என்று EMSC தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த […]

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு பேராசிரியர் பலி

அமெரிக்காவில் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பேராசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பேராசிரியர் பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்தின் […]

கனடாவில் இறப்பு வீதம் ஒரு வீதத்தினால் உயர்வு

கனடாவில் மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறப்பு வீதம் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என  தெரிவிக்கப்படுகிறது.  இதே வேளை கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயது களிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்று ஆகிய ஏதுக்களினால் இவ்வாறு அதிகளவு மரணங்கள் […]

” பேச்சு” விருதுகளை அள்ளிய வீச்சு

  தென்னிந்தியாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Ondraga Entertainment, நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல சுயாதீன பாடல்கள் மற்றும் குறும்படங்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களின் சமீபத்திய வெளியீடுகளான முத்த பிச்சை (இந்தப் பாடலை இசையமைத்து, பாடி, இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்), எரிமலையின் மகளே (கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையில் பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்), Tour De Kollywood & Offscreen […]

கனடாவில் – புதிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிருப்தி

கனடாவில் புதிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடவுச்சீட்டை பயன்படுத்தும் பிரஜைகள் கடவுச்சீட்டு தரம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். கனடிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு நான்கு நாட்களிலேயே அந்த கடவுச்சீட்டு சுருள்வதாகவும், விரிந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பழைய கடவுச்சீட்டில் இவ்வாறான எந்த பிரச்சனையும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த புதிய கடவுச்சீட்டு மடங்குவதாகவும் சுருள்வதாகவும் பயனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புதிய கடவுச்சீட்டு வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் சுருள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்! மக்கள் அவல நிலையை பாருங்கள்! கத்தோலிக்க சம்மேளம் அறிக்கை

இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் முழு அரசியல் தலைமைகளும் ஆழ்ந்த அவதானம் செலுத்துமாறு கோரி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி கடுமையாக சீர்குலைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு ஆபத்தான சூழ்நிலையில் அரசியல் நாடகங்களை புறக்கணித்து மக்களின் அவல நிலையை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு கத்தோலிக்க சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான […]