கனடாவில் இருந்து வந்த நபர் யாழில் உயிரிழப்பு
யாழில் கனடாவில் இருந்து வந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (26) யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த நபர், பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, […]
இலங்கை விஜயம் செய்திருக்கும் அமெரிக்க செனட்டர்!பல தரப்பட்ட சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
அமெரிக்காவின் MaryLand செனட்டரான கிறீஸ் வேன் ஹோலன் உத்தியோகபூர்வ விஜனமொன்றை மௌற்கொண்டு இலங்கை விஜயம் செய்திருக்கிறார். ராஜதந்திரியான கிறீஸ் அவர்களின் தந்தை கிறீஸ் வேன் ஹோலன் சீனியர் 1972 – 1976 ஆம் ஆண்டு இலங்கையின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியவர். தற்போதைய நிலையில் இவரது வரவானது முக்கிய அரசியல் விடயமாக நோக்கப்படுகிறது. சீன போர்க்கப்பல் இலங்கை வர இருக்கிற சமயத்தில இவர் இலங்கை வந்திருக்கிறார். இவருடன் தாம் பல இடங்களை சுற்றி பார்க்க இருப்பதுடன் இலங்கையின் பொருளாதார […]
நாளைய தினம் அபூர்வ வானியல் நிகழ்வு
நாளைய தினம் சுப்பர் புளூ மூன் எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல […]
சர்வதேச மஸ்ஜர்ஸ் தடகள சம்பியன்ஷிப் : றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.
(எஸ்.அஷ்ரப்கான்) முதலாவது சர்வதேச மஸ்ஜர்ஸ் தடகள சம்பியன்ஷிப்- 2023 போட்டியின் சர்வதேச சிரேஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றிய கல்முனை அல் மிஸ்பஹ் மகா வித்தியலய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் (400 m Hurdles,100 m Hurdles) தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை தனதாக்கிக் கொண்டார். கடந்த 19, 20ந் திகதிகளில் தியகம சர்வதேச மைதனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குறித்த வெற்றிகளை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் பெற்றுள்ளார். இவகுக்கான […]
வாழைச்சேனையில் அமைதிப்பேரணி
எஸ்.எம்.எம்.முர்ஷித் ‘சிறுவர்களுக்கான பாதுகாப்புச்சூழலை உருவாக்குதல்’ என்ற தொணிப்பொருளில் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தினால் கனியேல் சிறுவர் அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் சிறுவர்களுக்கான பாதுகாப்புச் சூழ்நிலையை உருவாக்குவதற்கான அமைதிப்பேரணி வாழைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டோர் ‘அன்பான தாய்மார்களே பிள்ளைகளைத் தவிக்க விட்டு வெளிநாடு செல்லாதீர்கள்’, ‘என்னை விட்டுப்போகாதே அம்மா’, ‘எங்களது பாதுகாப்பு உங்களது கைகளில்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர். அமைதிப்பேரணியானது வாழைச்சேனை சுற்றுவளைவு மையப்பகுதியிலிருந்து […]
கனடாவில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் கிரிப்டோ கரன்சி மோசடி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக போலி வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலி வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடியா மோசடி தவிர்ப்பு நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் சுயாதீன பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு மோசடி […]
லொறி மோதியதில் ரதெல்ல சமர்செட் தோட்டத்தை சேர்ந்த ராஜு மரணம்!
( நூரளை பி. எஸ். மணியம் ) அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல கார்லிபேக் பிரதேசத்தில் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை நபர் ஒருவர் பாதையில் வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடக்க முற்பட்டபோது மிக வேகமாக சென்ற லொறி மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா ரதெல்ல சமர்செட் தோட்டத்தின் லேங்டல் பிரிவில் வசித்து வந்த தோட்ட தொழிலாளி யான ராஜு கிருஷ்ணகுமார் (வயது 33) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]
” நடிகர் விஜய்” மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்கும் லைக்கா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர். ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கியுள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார். தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது ஆர்வம் அதிகம். இந்த நிலையில் அப்பா விஜய்யை போல் கதாநாயகனாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக ஜேசன் சஞ்சய் களமிறங்குகிறார். We are beyond excited 🤩 & […]
யாழில் 09 தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம்
யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (28) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரையிலான ஒரு மணி நேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றது. அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி (ETF) நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் போது, இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன் மூலம் EPF/ETF நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் […]
போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து மாணவர்களை காப்பாற்ற தனியான படைப்பிரிவு அவசியம்!
போதைப்பொருள் வியாபாரம் காரணமாக, நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாகவும்,ஈஸி கேஷ் போன்ற முறைகள் மூலம் போதைப்பொருள் அரக்கன் பாடசாலை கட்டமைப்பு மற்றும் பாடசாலை மாணவர்களை விழுங்கிவிட்டதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளுக்கு செல்லும்போது பெற்றோர்கள் கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே,பாடசாலை மாணவர்களிடமிருந்து போதைப்பொருளை அகற்றுவதற்கான அவசர வேலைத்திட்டம் அவசியம் என்றும், பிள்ளைகளை மையமாகக் கொண்ட போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிரான கடுமையான சட்ட கட்டமைப்பு மற்றும் வேலைத்திட்டம் தேவை […]