புதிய மடு ஆலய பரிபாலகராக அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார்
(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் ஆயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பங்குத் தளங்களங்களின் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அருட்பணியாளர்களின் இடம்மாற்றம் தற்பொழுது இடம்பெற்றுள்ளது. இந்த வருடாந்த இடம்மாற்றங்கள் பெரும்பாலும் ஆவணி மாத மருதமடு அன்னையின் பெருவிழாவை தொடர்ந்து இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கமைய மன்னார் மறைமாவட்த்தின் பாதுகாவலியும் உலகப் பகழ்பெற்ற புனித ஸ்தலமான மருதமடு அன்னையின் ஆலயப் பரிபாலகராக கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை இவ் ஆலய பரிபாலகராக கடமையாற்றி வந்த அருட்பணி […]
நீர் வழங்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்தார் ராமேஸ்வரன் MP
( நூரளை பி. எஸ். மணியம்) நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட “புதிய வாழ்கை வீடமைப்பு திட்டத்தின்” வீடுகளுக்கு நீர் வசதியை வழங்குமுகமாக நேற்று (27) நீர் வழங்கும் செயற்திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , இ.தொ.கா வின் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையில் மஸ்கெலியா கிளெணுகி , பொகவந்தலாவை ,கெம்பியன் […]
மாற்றுப் பயிராக பயறு செய்யப்பட்டத்தில் மன்னாரில் அறுவடை பிரமாதம்.!
(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாற்றுப் பயிராக பயறு செய்யப்பட்டத்தில் கூடிய பலாபலன்களை விவசாயிகள் பெற்றுள்ளனர். அதிலும் இதன் மூலம் பெண்கள் நாளாந்தம் ஐயாயிரம் ரூபா வருமானத்தை பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு மேலும் தெரிவிக்கையில் இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் […]
வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள்!!
நூருல் ஹுதா உமர். பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலயம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலயம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு ஆகியவற்றின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் செயற்படுத்தலின் கீழ் கிராமிய உற்பத்திகளை பொதியிடும் நிலையம் மற்றும் கிராமிய உற்பத்திகளுக்கான கண்காட்சியும் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நியூ […]
பட்டம் பறக்கவிடத் தடை!
அஸ்ரப் அலீ இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் 300 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் காத்தாடிகளை பறக்கவிடுவதும், ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. காத்தாடிகளை பறக்கவிட பயன்படுத்தப்படும் தடிமனானகயிறு வான்வெளிக்கு அச்சுறுத்தலாக […]
திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பிக்குகள்!
அஸ்ரப் அலீ திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு செந்தில் தொண்டமான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், ஆளுனர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட செயலகத்தின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு அலுவலர்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் செந்தில் தொண்டமான் தனது முன்னைய உத்தரவை […]
நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டம்! ( படங்கள்)
எம்.நாசர் அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராகப் கொழும்பில் இன்று போராட்டமொன்று கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் பொருளாதார மீட்சிக்கான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஊழியர் சேமலாப வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர்களின் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் […]
வெல்லம்பிட்டிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!
– எம் .நாசர்- வெல்லம்பிட்டி – கித்தம்பஹுவ பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் மோதரை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தாழ்த்துவ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தலுக்கான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க வேண்டும் ! வேலு குமார் MP
“பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் எனும் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கடந்த வாரம் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரன மற்றும் ராஜாங்க அமைச்சர் கௌரவ லொஹான் ரத்வத்தவுடன் பெருந்தோட்ட அமைச்சில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் […]
இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் காரியாலயத்தை மாற்றாதே!13 அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை
( நூரளை பி. எஸ். மணியம்) நுவரெலியாவில் நீண்ட காலமாக இயங்கி வந்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் நுவரெலியா மாவட்ட காரியாலய த்தை இடம் மாற்ற வேண்டாம்.பொது அமைப்புகள் கோரிக்கை! தற்பொழுது நுவரெலியாவில் இயங்கிவரும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கிளை காரியாலயத்தை அட்டன் நகருக்கு மாற்ற இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நுவரெலியா காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம். என நுவரெலியாவில் இயங்கிவரும் 13 பொது அமைப்புகள் பிரதிநிதிகள் […]